லண்டனில் பயின்று வந்த மகனை அரசு பள்ளியில் சேர்ந்த பெற்றோர்: காரணம் இதுதான்!

 

லண்டனில்  பயின்று வந்த மகனை அரசு பள்ளியில் சேர்ந்த பெற்றோர்: காரணம்  இதுதான்!

லண்டனில் படித்து வந்த மகனை அவரது பெற்றோர் அரசு பள்ளியில் சேர்த்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.

விழுப்புரம்: லண்டனில் படித்து வந்த மகனை அவரது பெற்றோர் அரசு பள்ளியில் சேர்த்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.

school

விழுப்புரம் மாவட்டம் நன்னாடு கிராமத்தில் செயல்பட்டு வரும் தொடக்கப் பள்ளியில்  65 மாணவர்கள் படித்து வருகின்றனர். தனியார் பள்ளியை காட்டிலும் இந்த பள்ளி சிறப்பாக இயங்கி வருகிறது. காலையில் இறைவணக்கத்துடன் யோகா பயிற்சி, சுத்தமான குடிநீர், கழிவறைகள், ஒவ்வொரு வியாழக்கிழமையும் மாணவர்களின் உடல்நிலை கருதி மூலிகை பொருட்களின் கூடிய கஞ்சி என அதகளப்படுத்தி வருகின்றனர். இதற்கு தலைமை ஆசிரியை புவனேஸ்வரி, பெற்றோர்,  ஆசிரியர் கழகம் மற்றும் நன்கொடையாளர் உள்ளிட்ட பலர் துணைபுரிந்து வருகின்றனர். 

school

இந்நிலையில் இப்பள்ளி பற்றி கேள்விப்பட்ட விழுப்புரத்தைச் சேர்ந்த  சுபாஷினி- சிவப்பிரகாஷ் தம்பதி லண்டனில் படித்து வந்த மகன் அன்புச்செல்வனை இப்பள்ளியில் சேர்த்துள்ளனர். இதுகுறித்து கூறியுள்ள அன்புச்செல்வனின் தாய்  சுபாஷினி, நானும் என் கணவரும் அரசு பள்ளியில் படித்தவர்கள் தான். அரசு பள்ளியில் மாணவர்களுக்குச் சிறந்த கல்வியை வழங்குகின்றனர். மேலும் கல்வி மட்டுமில்லாது கூடுதல் திறனையும் மேம்படுத்துகின்றனர்.அதனால் எங்கள் மகனை இப்பள்ளியில் சேர்த்துள்ளோம்’ என்றார்.