‘லட்ச ரூபாய் தரேன் என்கூட டேட்டிங் வரீயா’? ஷாலுவை அழைத்த மர்ப நபர்! 

 

‘லட்ச ரூபாய் தரேன் என்கூட டேட்டிங் வரீயா’? ஷாலுவை அழைத்த மர்ப நபர்! 

கடந்த சில மாதங்களாக சர்ச்சையில் அதிகமாகச் சிக்கியவர் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளவர் நடிகை ஷாலு ஷாமு.

கடந்த சில மாதங்களாக சர்ச்சையில் அதிகமாகச் சிக்கியவர் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளவர் நடிகை ஷாலு ஷம்மு. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரியின் காதலியாகவும் ஸ்ரீ திவ்யாவின் தோழியாகவும் நடித்து பிரபலமான இவர் தமிழில் குறைவான படங்களில் மட்டுமே நடித்துள்ளார். 

படங்களில் வாய்ப்பு கிடைக்காததால் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்தார். அதுமட்டுமின்றி தனது ஆண் நண்பருடன் இணைந்து நடனம் ஆடுவது என்று தொடர்ந்து சர்ச்சையைக் கிளப்பிக் கொண்டே இருந்தார். 

இந்த நிலையில் சமீபத்தில் இவரிடம் இன்ஸ்டாகிராமில் ஒருவர் விளம்பர படத்தில் நடிக்க சம்மதம் கேட்டுள்ளார். அதற்காகச் சம்பளமாக ரூ50 ஆயிரம் கொடுப்பதாகவும் கூறியுள்ளார். அதன் பின்னர் 1 லட்சம் தருகிறேன் என்னுடன் டேட்டிங் வருகிறீர்களா என்று அந்த மர்ம நபர் தொல்லை செய்துள்ளார். ஒரு கட்டத்தில் அவரின் தொல்லை தங்க முடியாமல் அந்த நபர் அனுப்பிய மெசேஜ்களை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து ஷாலு வெளியிட்டுள்ளார். 

shalu

முன்னதாக இவர் விஜய் தேவரகொண்டா படத்தில் நடிப்பதற்காகத் தன்னை ஒருவர் படுக்கைக்கு அழைத்தார் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.