லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை: அரசு ஊழியர்கள் பீதி ..!

 

லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை: அரசு ஊழியர்கள் பீதி ..!

இக்காலகட்டத்தில் லஞ்சம் கொடுக்காமல் வேலை நடக்காது என்று மக்கள் மனதில் பதிந்தே விட்டது.

அரசு அலுவலகங்களில் ஊழலும், லஞ்சமும் வழக்கமானதாக மாறிவிட்டது. மக்களுக்காக பணியாற்றும் அரசு அலுவலங்களில், இக்காலகட்டத்தில் லஞ்சம் கொடுக்காமல் வேலை நடக்காது என்று மக்கள் மனதில் பதிந்தே விட்டது. அரசு அலுவலகங்கள் மீது மக்களுக்கு உள்ள இத்தகைய கருத்தை உடைத்தெறிய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Money

அதில் நாமக்கல் க்ரீன் பார்க் பள்ளி, கல்கி ஆசிரமம் என உள்ளிட்ட இடங்களில் வரி ஏய்ப்பும் ஊழலும் நடந்துள்ளதை வருமான வரித்துறையினர் அம்பலப்படுத்தினர். அதுமட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்கள் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் சிக்கின. 

அதே போல, நேற்று சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனையில் டிப்பன் பாக்ஸ், கைப்பை உள்ளிட்ட பொருட்களினுள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 61 ஆயிரம் ரூபாய் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Money

கடந்த 27 ஆம் தேதி முதல், லஞ்சம் வாங்க மாட்டோம் என்று அரசு ஊழியர்கள் தினமும் உறுதிமொழி ஏற்ற பின்னர் தனது வேலைகளைத் துவங்கும் நிலையில், இந்த அலுவலகத்தில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், லஞ்ச ஒழிப்புத் துறையினர் மேற்கொள்ளும் இந்த அதிரடி சோதனை அரசு ஊழியர்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.