லஞ்சம் கேட்ட பெண் காவல் ஆய்வாளரை பணி நீக்கம் செய்து அதிரடி காட்டிய டிஜிபி! 

லஞ்சம் கேட்ட பெண் காவல் ஆய்வாளரை பணி நீக்கம் செய்து அதிரடி காட்டிய டிஜிபி! 

மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரியை விடுவிக்க லஞ்சம் கேட்டு பேரம் பேசியதாக பெண் காவல் ஆய்வாளர் வனிதாராணி , உதவி காவல் ஆய்வாளர் செந்தில்வேல், தலைமை காவலர்கள் இருவர் என மொத்தம் நான்கு பேரை நிரந்தரப் பணி நீக்கம் செய்து தமிழக டிஜிபி  திரிபாதி ஐபிஎஸ்  அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

Police

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி அருகே உதவி ஆய்வாளர் செந்தில் தலைமையிலான மணல் தடுப்பு பறக்கும்படையினர் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதி கேரளாவுக்குச் செல்ல இருந்த மணல் லாரியை மறித்து சோதனை நடத்தினர். அந்த லாரியில் அனைத்து ஆவணங்கள் மற்றும் அனுமதி ரசீதுகள் இருந்தும்கூட ஆரல்வாய்மொழி காவல் நிலையத்துக்கு லாரியை கொண்டு சென்றனர். ஆனால், காவல் ஆய்வாளராக இருந்த வனிதா ராணி வழக்கு பதிவு செய்யாமல் லாரி உரிமையாளரிடம் லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால், அவர் லஞ்சம் தர மறுத்ததால் லாரியை தாசில்தாரிடம் ஒப்படைத்து அபராதம் விதித்து அனுப்பி வைத்துள்ளனர். இதனால் லாரி உரிமையாளர் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார். அப்போது லாரி உரிமையாளரிடம் பெண் காவல் ஆய்வாளர் வனிதாராணி லஞ்சம் கேட்டு பேரம் பேசியதாக ஆடியோ வெளியானது. இதையடுத்து பெண் காவல் ஆய்வாளர் வனிதாராணி உள்ளிட்ட நான்கு பேரை தமிழக டிஜிபி நிரந்திர பணிநீக்கம் செய்துள்ளார்.