லஞ்சத்தின் மூச்சை மூன்றே மாதங்களில் நிறுத்த ஜெகன் மோகன் ரெட்டி முடிவு! 

 

லஞ்சத்தின் மூச்சை மூன்றே மாதங்களில் நிறுத்த ஜெகன் மோகன் ரெட்டி முடிவு! 

ஆந்திர மாநில அரசு துறைகளில் இன்னும் 3 மாதத்தில் லஞ்சம் என்பதே இருக்கக் கூடாது என்று மாநில லஞ்ச ஒழிப்புத்துறைக்கு முதல்வர் ஜெகன் மோகன் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். 

ஆந்திர மாநில அரசு துறைகளில் இன்னும் 3 மாதத்தில் லஞ்சம் என்பதே இருக்கக் கூடாது என்று மாநில லஞ்ச ஒழிப்புத்துறைக்கு முதல்வர் ஜெகன் மோகன் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். 

ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராக பதவியேற்ற பின் பல அதிரடி திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆந்திர சட்டமன்றத்தில் அம்மாநில இளைஞர்களுக்கான சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. மேலும் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,  அரசு கட்டுப்பாட்டில் பார்கள், கூட்டுத் தொழில் நிறுவனங்கள், அரசு துறைகளிலும் பல்வேறு மாற்றங்கள், பாலியல் வன்கொடுமைக்கு 3 வாரத்தில் தூக்கு என பல அதிரடி திட்டங்களை அமல்படுத்தி மக்களின் அமோக வரவேற்பை பெற்றுவருகிறார்.

Jagan Mohan Reddy
இந்நிலையில் ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், தாடேபல்லியில் உள்ள முதல்வர் முகாம் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய  முதல்வர் ஜெகன் மோகன், மூன்றே மாதங்களில் ஆந்திராவில் லஞ்சம் ஒழிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.  மேலும்  கடந்த மூன்று மாதங்களில் மக்களின் புகார்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் எடுத்த நடவடிக்கைகள் திருப்தி அளிக்கவில்லை என்றும், அரசு துறைகளில் பணிபுரியும் அதிகாரிகள், பொதுமக்களிடம் இருந்து லஞ்சம் பெற வேண்டும் என்றால் அச்சம் ஏற்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். பொதுமக்களிடம் அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் உடனரியாக  14400 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என ஆந்திர அரசு அறிவித்திருப்பது குறிப்பிடதக்கது.