‘ லக்ஷ்மியாக மாறிய அக்‌ஷய் குமார்’ : காஞ்சனா பாலிவுட் ரீமேக்கின் வைரல் போட்டோ!

 

‘ லக்ஷ்மியாக மாறிய அக்‌ஷய் குமார்’ : காஞ்சனா பாலிவுட் ரீமேக்கின் வைரல் போட்டோ!

ராகவா லாரன்ஸ் இயக்கி வரும் இப்படத்தில் அக்‌ஷய் குமார் , நடிகை கியாரா அத்வானி ஆகியோர் நடித்து வருகின்றனர்.

மும்பை:  ‘காஞ்சனா’ படத்தின் ரீமேக்கான ‘லக்ஷ்மி பாம்’ திரைப்படத்தில் நடிகர் அக்ஷய்குமார் திருநங்கை வேடத்தில் இருக்கும் புகைப்படம்  வெளியாகியுள்ளது.

akshay

நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான முனி படத்தின் இரண்டாம் பாகமான காஞ்சனா திரைப்படம் கடந்த 2011 ஆம்  ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது வரை காஞ்சனா 2, 3 பாகங்கள் வெளியாகியுள்ளது.  தற்போது இந்த படம் ஹிந்தியில் ரீமேக்காகி வருகிறது. ராகவா லாரன்ஸ் இயக்கி வரும் இப்படத்தில் அக்‌ஷய் குமார் , நடிகை கியாரா அத்வானி ஆகியோர் நடித்து வருகின்றனர்.  இந்த படத்திற்கு லக்ஷ்மி பாம் என்று பெயரிடப்பட்டுள்ளது. 

 

இந்நிலையில் நவராத்திரி விழாவை முன்னிட்டு நடிகர் அக்ஷய்குமார் திருநங்கை  தோற்றத்தில் உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ‘நமக்குள் இருக்கும் பெண் தெய்வத்தை வணங்கி நமக்குள் இருக்கும் வலிமையைக் கொண்டாடும் நவராத்திரி விழாவில் லக்ஷ்மி கதாபாத்திரத்தை உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படமானது தற்போது வைரலாகி வருகிறது.