லக்னபலம்: உயிர் முக்கியமா? அல்லது கோடிக்கணக்கில் பணம் முக்கியமா?

 

லக்னபலம்: உயிர் முக்கியமா? அல்லது கோடிக்கணக்கில் பணம் முக்கியமா?

லக்னாதிபதி எப்படி இருந்தால் பலம் என்பதற்கு பலர் மிகசரியான பலன் கூறியுள்ளனர் உங்கள் அனுபவத்தில் லக்னம் வலுவிழந்து 5 மற்றும் 9 ஆம் அதிபதிகள் உச்சம்

உங்கள் முன் கடவுள் நேரில் வந்து இரண்டு டம்ளர்களில் இரண்டு வேறுபட்ட திரவங்களை குடிக்க கொடுக்கிறார். ஒன்றில் கொடிய விஷம்- குடித்த அடுத்த வினாடியே மரணம். மற்றொன்றில் மரணமில்லாத பெருவாழ்வை தரும் அமிர்தம்- அதை குடித்தால் மரணம் என்றுமில்லை. இரண்டும் ஒரேமாதிரியான திரவம்.

நீங்கள் என்ன முடிவெடுப்பீர்கள்,? லக்னமும் லக்னாதிபதியும் வலிமைபெற்றவர் இரண்டையும் குடிப்பர். இதன் சூட்சும் பலமர அளப்பரியது.

சரி. 

லக்னாதிபதி எப்படி இருந்தால் பலம் என்பதற்கு பலர் மிகசரியான பலன் கூறியுள்ளனர் உங்கள் அனுபவத்தில் லக்னம் வலுவிழந்து 5 மற்றும் 9 ஆம் அதிபதிகள் உச்சம் , ஆட்சிபெற்ற எத்தனை நபர்கள் உயர்வான வாழ்க்கை வாழ்ந்துள்ளனர் என்று கணக்கிடுங்கள். அல்லது பல ராஜயோகங்கள் ஜாதகத்தில் இருந்தும் ஏன் தனது தசா புத்திகளில் பலனளிக்கவில்லை என்று தனியாக ஆய்வுசெய்யுங்கள்.

யோகபங்கம் ஏற்பட மூலநூல்களில் நூற்றுக்கணக்கான விதிகள் இருந்தாலும் அதில் முதன்மையான யோகபங்க விதி லக்னமும் லக்னாதிபதியும் சுப மற்றும் யோகபலமிழப்பதேயாகும். இன்று ஆட்சி அதிகாரத்திலும் , உலக தொழிலாதிக்கத்திலும் உள்ள எவருக்கும் லக்ன,லக்னாதிபதி நிச்சயமாக பலமிழக்காமல் சுபயோக பலம்பெற்றிருக்கும்.

சரி லக்னமும் லக்னாதிபதியும் சுபவலு பெறுவதற்கான விதியென்னவென்று பார்க்கலாம். 

1. லக்னமும் லக்னாதிபதியும் கேந்திரகோணத்தில் இருந்து புஷ்கர பாகையிலும் புஷ்கர நவாம்சத்திலும் இருப்பது.

2. லக்னமோ, லக்னபுள்ளி விழுந்த நட்சத்திரமோ , லக்னாதிபதியோ பிறப்ப நாமயோகத்தின்படி யோகியாக அமர்ந்து யோகபலனை பெற்றிருப்பது.

3. லக்னத்தையோ, லக்னாதிபதியையோ வலுபெற்ற குரு பார்வை செய்வதும் சேர்ந்திருப்பதும்.
4. லக்னாதிபதி லக்னத்தில் ஆட்சியாக இருப்பது.

5. லக்னாதிபதி உச்சமாகி வீடுகொடுத்த ராசிநாதன் வருபெறுவது.

6. லக்னாதிபதி மற்றும் லக்னத்தில் சுபர்தொடர்பற்ற பாவிகளான சனி, செவ்வாய், ராகு சேர்க்கையிலோ அல்லது லக்னத்தில் இருப்பது.

7. லக்னாதிபதியோ, லக்னமோ வர்க்கோத்தம பலமடைவது.

8.பிறந்த லக்னமே இந்துலக்னமாக இருப்பது.

9. லக்னாதிபதி பல வர்க்கங்களில் சுபரானால் ஆட்சி உச்சமும், பாவியானால் சுபருடைய ராசிகளிலும் இருப்பது.

10. லக்னாதிபதி அம்சத்திலும் ராசியிலும் ஆட்சி, உச்சம், நட்பாக இருந்து ஆரோகண கதியில் இருப்பது.

11. லக்னாதிபதி சட்பல வலிமைபெற்று ஸ்தானபலம், திக்பலம், அயனபலம், சேஷ்டாபலம், வக்கிரபலம் போன்ற பலங்களை பெறுவது.

12. லக்னாதிபதி இருந்த ராசியிலும் லக்னத்திலும் சர்வாஷ்ட வர்க்கத்தில் 30 பரல்கள் ( பிந்துக்கள்) இருப்பது.

13. லக்னாதிபதி கேந்திரகோணத்தில் இருந்து 5 பரல்களையாவது ( சுபரானால்,) பாவியானால் முன் று பரல்களையாவது பெற்றிருப்பது.

மேற்கூறியவைகளில் எத்தனை வர்க்கங்களில் லக்னேசன் வலுபெற்றிருக்கிறதோ அத்தனை மடங்கு ஜாதகபலனை விருத்தி செய்யும்.

லக்னாதிபதி வலுபெற்றவனே ஒருபோதும் மற்ற தீயகிரக தசாவில் தன்னிலை இழக்காதவனும், வாழ்வில் தனது குறிக்கோளை அடைபவனும், யோகதசாக்கள் நடந்தால் மனநிறைவோடு யோகபாக்கியங்களையும், சுகசௌக்கியங்களை அனுபவிப்பவனும், 6,8,12 ஆம் அதிபதிகள் மற்றும் லக்ன பாவிகள் கொடிய தீயபலன்களை அள்ளி வழங்கியபோதும் எதிர்த்து தாக்குபிடித்து அதை வெல்பவனும் ஆவான்.

அரசர்களது ஜாதகத்தில் நிச்சயமாக லக்னமும் லக்னாதிபதியுமே வலுபெற்றிருக்கும். லக்னம் தரும் ராஜயோகத்தைபற்றி மகாகவி காளிதாசர் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

லக்னாதிபதி முதல் லக்னத்தில் முதல் திரேக்காணத்தில் இருந்தால் நீதிபதியாகவும், இரண்டாவது திரேக்காணத்தில் இருந்தால் மண்டலாதிபதியாகவும், மூன்றாவது திரேக்காணத்தில் இருந்தால் கிராம தலைவனாகவும் இருப்பான்.

லக்னாதிபதி உச்ச பாகையில் வலுபெற்றாலோ, சுபவர்க்கங்களில் வலுபெற்றிருந்தாலோ அரசர்கள் வணங்கும் சக்கரவர்த்தியாக இருப்பான். மன்னர் கல்யாணவர்மர் தனது சாராவளியில் சாதாரண குலத்தில் பிறந்தவர்களையும் லக்னாதிபதி வலுபெற்றால் அதிமுக்கியஸ்தராகவோ, அரசராகவோ ஆக்குவிக்கும் என்கிறார்.

லக்னமும் லக்னாதிபதியும் வலுபெற்ற ஜாதகங்களே யோகஜாதகங்கள். லக்னாதிபதி வலுபெற்றவனே அனைத்து நிலைகளிலும் போராடி வெல்கிறான். லக்னாதிபதியைவிட எந்த அதிபதியும் வலுபெறக்கூடாது. லக்னத்தை சுபரோடு சேராத , சுபர் பார்க்காத பாவிகள் பார்க்கக்கூடாது.

லக்னத்துக்கு இருபுறமும் சுபர் தொடர்பற்ற பாவிகள் இருக்கக்கூடாது( பாவகர்த்தரியோகம்) லக்னத்துக்கு உப பத்த்தில் சுபர்கள் இருக்கவேண்டும். லக்னத்துக்கும் லக்னாதிபதிக்கும் கேந்திரத்தில் சுபர்கள் இருக்க வேண்டும்.

மேற்கூறியவற்றில் எத்தனை சிறப்புகள் ஒரு ஜாதகத்தில் இருக்கிறதோ அத்தனை சிறப்புகளை ஜாதகர் உறுதியாகபெற்றிருப்பர். உதாரணம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் ஜாதகம்.