லக்கேஜ் கன்வேயருடன் சென்ற குழந்தை! 

 

லக்கேஜ் கன்வேயருடன் சென்ற குழந்தை! 

அமெரிக்காவின் அட்லாண்டா சர்வதேச விமான நிலையத்தில் விமானப் பயணிகளின் உடைமைகளை சோதனையிடும் லக்கேஜ் கன்வேயரில் குழந்தை ஒன்று சிக்கிய வீடியோ வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் அட்லாண்டா சர்வதேச விமான நிலையத்தில் விமானப் பயணிகளின் உடைமைகளை சோதனையிடும் லக்கேஜ் கன்வேயரில் குழந்தை ஒன்று சிக்கிய வீடியோ வெளியாகியுள்ளது.

 2 வயது குழந்தையுடன் வந்த ஒரு பெண் பயணி தனது போர்டிங் பாஸை சரிசெய்வதற்காக வரிசையில் காத்துக்கொண்டிருந்தார். அப்போது அவரது குழந்தை லக்கேஜ் கன்வேயர் பெல்டில் அமர்ந்துள்ளார். உடனே கன்வேயர் உடைமைகளுடன் சிறுவனையும் இழுத்து சென்றுள்ளது. அருகில் நின்றுகொண்டிருந்த குழந்தையை காணாததால் பதட்டமடைந்த அந்த பெண், அலறியடித்துகொண்டு குழந்தையை தேடியுள்ளார். சிறிது நேரத்திற்கு பின்னர் குழந்தை, கன்வேயரின் மறுபுறம் வழியாக வெளியே வந்தார். அந்த குழந்தைக்கு கையில் சிறுகாயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்திவருவதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்