ரோஹித், கோஹ்லி அபாரம்! ஆஸி., அடக்கி தொடரை கைப்பற்றியது இந்தியா!

 

ரோஹித், கோஹ்லி அபாரம்! ஆஸி., அடக்கி தொடரை கைப்பற்றியது இந்தியா!

மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்திய அணி.இந்தியா வந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்ற ஆஸ்திரேலிய அணி, முதல் ஒருநாள் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அடுத்து இரண்டாவது போட்டியில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன்மூலம் இந்த ஒருநாள் தொடர் 1-1 என சமநிலையில் நீடித்தது. 

மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்திய அணி.

இந்தியா வந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்ற ஆஸ்திரேலிய அணி, முதல் ஒருநாள் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அடுத்து இரண்டாவது போட்டியில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன்மூலம் இந்த ஒருநாள் தொடர் 1-1 என சமநிலையில் நீடித்தது. 

test

பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் 19ஆம் தேதி நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 286 ரன்கள் அடித்தது. இதில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 131 ரன்களும், லபுச்சானே 54 ரன்கள் அடித்திருந்தனர். 

287 ரன்கள் எடுத்தால் தொடரை கைப்பற்றலாம் என்கிற முனைப்பில் இந்திய அணிக்கு ரோகித் சர்மா மற்றும் கே எல் ராகுல் இருவரும் துவக்க வீரர்களாக களமிறங்கினர். தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக தவான் பேட்டிங் செய்ய முடியாமல் வெளியில் இருந்தார். கேஎல் ராகுல் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

third test

முதல் இரண்டு போட்டிகளில் சொதப்பிய ரோஹித் சர்மா இன்றைய போட்டியில் மிகவும் அசத்தலாக விளையாடினார். ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஜோடி சேர்ந்து இந்திய அணிக்கு ரன் குவிப்பில் ஈடுபட்டது மட்டுமல்லாமல், ஆஸ்திரேலிய அணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். 

இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 137 ரன்கள் சேர்த்தது. ரோகித் சர்மா 128 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் உட்பட 119 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் அய்யர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையில் விராட் கோலி சதத்தை நெருங்கிக் கொண்டிருந்தார். 

indiawin

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தனது 9 வது சதத்தை அடிப்பார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தபோது, துரதிஷ்டவசமாக 89 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் 44 ரன்களுடனும் மனிஷ் பாண்டே 8 ரன்களுடனும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 

47.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த இந்திய அணி 289 ரன்கள் அடித்து மூன்றாவது ஒருநாள் போட்டியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது. சதமடித்து அசத்திய ரோஹித் சர்மா ஆட்ட நாயகனாகவும், கடைசி இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியின் வெற்றிக்கு பங்காற்றிய விராட் கோலி தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டனர்.