ரோல் கேம்ரா ஆக்‌ஷன்: அட்டகாசமாக ஆட்டம் போடும் பிக் பாஸ் லேடீஸ்!

 

ரோல் கேம்ரா ஆக்‌ஷன்: அட்டகாசமாக ஆட்டம் போடும் பிக் பாஸ் லேடீஸ்!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வாரத்தில் போட்டியாளர்கள் டாஸ்க் ஏதுமின்றி ஜாலியாக ஆட்டம் போட்டு வருகின்றனர்

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வாரத்தில் போட்டியாளர்கள் டாஸ்க் ஏதுமின்றி ஜாலியாக ஆட்டம் போட்டு வருகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இறுதி வாரத்தில் போட்டியாளர்கள் அனைவரும் ஜாலியாக விளையாடி வருகின்றனர். இந்த சீசனில் இருந்து சமீபத்தில் வெளியான யாஷிகாவும், பாலாஜியும் மீண்டும் ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளனர்.

இந்த வாரம் இறுதி வாரம் என்பதால் எவ்வித சண்டை சச்சரவுமின்றி போட்டியாளர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்களின் ரீகேப்பாக இறுதிப்போட்டியாளர்கள் நடித்து வருகின்றனர்.

ஜாலி மோடில் இருக்கும் பிக் பாஸ் இறுதிப்போட்டியாளர்கள் ரோலிங் கேமரா ஆக்‌ஷன்..ரோலிங் சார்ன்னு சொல்லிக்கிட்டு கலட்டாவாக ஆட்டம் போட்டி வருகின்றனர். இந்த ஆட்டம் எல்லாம் இன்னும் கொஞ்ச நாள் தான் என்பதை நெட்டிசன்கள் நினைவுப்படுத்தி வருகின்றனர்.