ரோபோ ஷங்கரின் துடுக்கான பேச்சு; மீடியா ஆட்களை சமாளித்த சிவகார்த்தி!?

 

ரோபோ ஷங்கரின் துடுக்கான பேச்சு;  மீடியா ஆட்களை சமாளித்த சிவகார்த்தி!?

‘Mr. லோக்கல்’ பத்திரிகையாளர் சந்திப்பில் ரோபோ ஷங்கர் பேச்சால் சர்ச்சையானது. இறுதியில், தன்னுடைய பேச்சில் விளக்கமளித்துத் தீர்த்துவைத்தார் 

சென்னை:  ‘Mr. லோக்கல்’ பத்திரிகையாளர் சந்திப்பில் ரோபோ ஷங்கர் பேச்சால் சர்ச்சையானது. இறுதியில், தன்னுடைய பேச்சில் விளக்கமளித்துத் தீர்த்துவைத்தார் 

இயக்குநர்  எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்  ‘Mr. லோக்கல்’.  இப்படத்தில் நயன்தாரா, ராதிகா, ரோபோ ஷங்கர், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.  இப்படம், மே 17-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. 

mr local

இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடந்தது. அதில்  சிவகார்த்திகேயன், இயக்குநர் ராஜேஷ், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, ஹிப் ஹாப் ஆதி, ரோபோ ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய நடிகர் ரோபோ ஷங்கர், பத்திரிகையாளர்களுக்குப் படம் போட்டு  காட்டினால் ரொம்ப அமைதியா இருக்கீங்க? உங்க குடும்பத்தோட படத்துக்கு போனா இப்படியா இருப்பீங்க? நீங்க கைதட்டிப் பார்த்தால் தானே வெளியில் மக்களும் அப்படி பார்ப்பார்கள்? இதனால் தான் நிறைய பிரஸ் ஷோக்களுக்கு நான் வருவதே இல்லை. நல்ல காமெடி சீனைக்கூட ஏன் முறைச்சு பார்க்கறீங்க’ என்றார்.

robo

இதைக்கேட்ட பத்திரிகையாளர்கள் கடுப்பாகி இது பத்திரிகையாளர் சந்திப்பா? இல்ல பாராட்டு விழாவா? என்று சத்தமிட்டனர். இதையடுத்து பேச வந்த  சிவகார்த்திகேயன், ‘ரோபோ அண்ணனுக்கு பதில் சொல்லி விடுகிறேன். அண்ணா… ஒரு ப்ரஸ் ஷோ, ப்ரஸ் மீட் என்றால், அவர்களும் என்ஜாய் பண்ணுவார்கள். தினமும் பிரஸ் ஷோ, பிரஸ் மீட்  என்றால் அவர்களும் என்ன செய்வார்கள்? இது அவர்களுடைய வேலை. அதை அவர்கள் சிறப்பாக செய்கிறார்கள். இப்போது எங்களை மேடைக்கு அழைக்கும்போதுகூட, ஏன்  யாருமே கைதட்ட மாட்டுறாங்க என்று ரோபோ அண்ணா கேட்டாரு. அதற்கு நான் சொன்னேன். அவங்க பிரஸ் அண்ணே.. ஃபேன்ஸ் இல்லன்னு சொன்னேன்’ என்று கூறினார்.

robo

தொடர்ந்து பேசிய அவர், நாம் என்ன பேச போகிறோம் என்று அவங்களுக்கு முன்னாடியே தெரியும். நல்ல படத்தை பார்க்கும் போது  அவர்களால் சிரிக்காமல் இருக்க முடியாது. அவர்களும் மனிதர்கள் தானே. ரஜினிமுருகன் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் அவர்கள் சிரித்து கைதட்டினர்’ என்று கூறி சர்ச்சைக்கு முற்று புள்ளி வைத்தார்.