ரோடு போட்ட ரசீது இங்க இருக்கு, நீங்க போட்ட ரோடு எங்க இருக்கு?

 

ரோடு போட்ட ரசீது இங்க இருக்கு, நீங்க போட்ட ரோடு எங்க இருக்கு?

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே புதிய சாலை அமைப்பதற்காக ஆர்டர் போடப்பட்டு, வேலை வாங்கப்பட்டு, டெண்டர் தொகை வழங்கப்பட்டு, ரசீது வாங்கப்பட்டு, பலர் பாடுபட்டு அமைக்கப்பட்ட ரோடு மட்டும் காணோம்.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே புதிய சாலை அமைப்பதற்காக ஆர்டர் போடப்பட்டு, வேலை வாங்கப்பட்டு, டெண்டர் தொகை வழங்கப்பட்டு, ரசீது வாங்கப்பட்டு, பலர் பாடுபட்டு அமைக்கப்பட்ட ரோடு மட்டும் காணோம். சாலை அமைக்கப்பட்டிருக்கிறது என எங்கே அறிவிப்புப் பலகை வைத்திருக்கிறார்களோ அங்கே பலகை மட்டுமே பல்லிளித்துக்கொண்டு இருக்கிறது. சாலையைக் காணோம்.

Board there, road where?

சாலை அமைத்ததற்கான தொகையாக அறிவிப்பில் இருப்பது 19 லட்சத்து 50ஆயிரம். எந்தெந்த அதிகாரிகளுக்கும் எந்தெந்த வட்டத்திற்கும் எவ்வளவு ஷேரோ? காமராஜபுரம் பகுதியில் சாலை என்றில்லை, எந்த அடிப்படை வசதியையும்கூட அதிகாரிகள் செய்து தருவதில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோருகின்றனர்.