ரோடு சும்மா கெடக்குதா? சரி இல்லையே! இங்க ஒரு டோல்கேட் போடணுமே!

 

ரோடு சும்மா கெடக்குதா? சரி இல்லையே! இங்க ஒரு டோல்கேட் போடணுமே!

வங்கியில் மூன்று முறைக்கும் மேல் சொந்தப் பணத்தை டெப்பாசிட் செய்தால்கூட‌ அதற்கும் ஜிஎஸ்டியோடு சேர்த்து வரிவிதித்து பணம் பார்க்கும் அரசாங்கங்கள் இருக்கும்போது, நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரத்து சாலையில் அதுவும் பிசியான சாலையில் சுங்கச்சாவடி இல்லாமல் இருந்தால் நன்றாகவா இருக்கும் என்று யோசித்த அதிகாரிகள், இந்தா இன்று முதல் சோதனைச் சாவடி அமைத்து கட்டணம் வசூலிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

கோயம்புத்தூர், ஈரோடு திருப்பூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு மைசூர் செல்வதற்கு ஈரோடு மாவட்டம் ச‌த்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் அமைந்துள்ள திம்பம் மலைப்பாதைதான் முக்கிய வழித்தடம். இந்த வழியே ரயில் போக்குவரத்து வேண்டும் என்ற அப்பகுதி மக்களின் கோரிக்கை பல ஆண்டுகளாக கோரிக்கை வடிவில் மட்டுமே இருப்பதால், திம்பம் மலைப்பாதை வழியே அதிக அளவிலான சரக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. மலைப்பாதையே என்றாலும், ரம்யமான இயற்கை சூழலுடன் கூடிய பாதை என்பதால், இவ்வழித்தடம் எப்போதும் பிசியாகவே இருக்கும்.


Dhimbam Road


வங்கியில் மூன்று முறைக்கும் மேல் சொந்தப் பணத்தை டெப்பாசிட் செய்தால்கூட‌ அதற்கும் ஜிஎஸ்டியோடு சேர்த்து வரிவிதித்து பணம் பார்க்கும் அரசாங்கங்கள் இருக்கும்போது, நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரத்து சாலையில் அதுவும் பிசியான சாலையில் சுங்கச்சாவடி இல்லாமல் இருந்தால் நன்றாகவா இருக்கும் என்று யோசித்த அதிகாரிகள், இந்தா இன்று முதல் சோதனைச் சாவடி அமைத்து கட்டணம் வசூலிக்க ஆரம்பித்துவிட்டார்கள். பண்ணாரி சோதனைச் சாவடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புலிகள் காப்பக துணை இயக்குநர் அருண்லால் நுழைவுக் கட்டண ரசீதை வழங்கி துவங்கி வைத்தார். இந்தச் சாலையில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டதை கொண்டாடும் வகையில் திறப்புவிழா சலுகையாக முதல் 4 நாட்களுக்கு கட்டணமில்லா அனுமதி ரசீது வழங்கப்படும். இன்றே முந்துங்கள்.