ரோகித், ராகுல் சதம்.. விண்டீஸ் அணிக்கு இமாலய இலக்கு!

 

ரோகித், ராகுல் சதம்.. விண்டீஸ் அணிக்கு இமாலய இலக்கு!

இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 387 ரன்கள் குவித்தது. துவக்க வீரர்கள் ரோகித் மற்றும் ராகுல் இருவரும் சதம் விளாசினார்.

இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 387 ரன்கள் குவித்தது. துவக்க வீரர்கள் ரோகித் மற்றும் ராகுல் இருவரும் சதம் விளாசினார்.

இந்தியா மற்றும் இண்டீஸ் அணிகள் மோதிய 2வது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பொல்லார்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். 

kl rahul

இதனையடுத்து இந்திய அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேஎல் ராகுல் மற்றும் ரோகித் சர்மா இருவரும் இண்டீஸ் அணியின் பந்துவீச்சை துவக்கத்தில் நிதானமாக எதிர்கொண்டனர். சற்று அதிரடி காட்டிய கேஎல் ராகுல் அரைசதம் கண்டார். மறுமுனையில் நங்கூரம் போல் நிலைத்து ஆடி வந்த ரோகித் சர்மா 67 பந்துகளில் அரைசதம் கடந்தார்.

இருவரும் அரைசதம் கடந்த பிறகு அதிரடியை வெளிப்படுத்த துவங்கினர். இந்த ஜோடி மளமளவென ரன் குவிப்பில் ஈடுபட்டது. ரோகித் சர்மா 107 பந்துகளில் சதம் விளாசினார். இது இவரது 28 ஆவது ஒருநாள் போட்டிகளில் சதமாகும். 

மறுமுனையில் இவருக்கு பக்கபலமாக இருந்த கே எல் ராகுல் 101 பந்துகளில் சதம் விளாசினார். இவர் 102 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் கோலி யாரும் எதிர்பாராத வகையில் வந்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். 

அடுத்ததாக ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் இருவரும் வானவேடிக்கைகள் காட்டினார். ரிஷப் பண்ட் 16 பந்துகளில் 39 ரன்கள் விளாசி வெளியேறினார். ஷ்ரேயாஸ் 32 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 387 ரன்கள் குவித்தது.