ரொம்ப ஸ்ட்ரெஸ்ல இருக்கீங்களா..! எதையெல்லாம் செய்யணும் : எதையெல்லாம் செய்யக்கூடாதுன்னு தெரிஞ்சுக்கங்க..!

 

ரொம்ப ஸ்ட்ரெஸ்ல இருக்கீங்களா..! எதையெல்லாம் செய்யணும் : எதையெல்லாம் செய்யக்கூடாதுன்னு தெரிஞ்சுக்கங்க..!

இப்போதுள்ள காலகட்டத்தில் யாரைக் கேட்டாலும் ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு என்று சொல்வதைக் கேட்க முடியும். பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கும் இப்போது ஸ்ட்ரெஸ் இருக்கிறது என்கிறார்கள் உளவியலாளர்கள்.அலுவலகத்தில் ஏற்படும் வேலை பளு,டார்கெட்டை முடித்தே ஆக வேண்டும் என்ற நெருக்கடி என பரபரப்பான வாழ்க்கை ஓட்டத்தில் இந்த ஸ்ட்ரெஸ் ஏற்படுகிறது.உலகில் ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு முதல் காரணமே இந்த ட்ரெஸ்தான்.பொருளாதார பிரச்சினை,குடும்பம் என்று எல்லா வகையிலும் நெருக்கடி இருக்கத்தான் செய்யும் அதற்காக மனதை தேவையில்லாமல் போட்டுக் குழப்பிக்க கூடாது. அம்பானிக்கும் பிரச்சினை இருக்கத்தான் செய்யும்.அதிலிருந்து வெளிவர முயற்சிப்பதே நிம்மதியான வாழ்வுக்கு வழிவகுக்கும். ஸ்ட்ரெஸிலிருந்து விட சில டிப்ஸ்…  

இப்போதுள்ள காலகட்டத்தில் யாரைக் கேட்டாலும் ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு என்று சொல்வதைக் கேட்க முடியும். பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கும் இப்போது ஸ்ட்ரெஸ் இருக்கிறது என்கிறார்கள் உளவியலாளர்கள்.அலுவலகத்தில் ஏற்படும் வேலை பளு,டார்கெட்டை முடித்தே ஆக வேண்டும் என்ற நெருக்கடி என பரபரப்பான வாழ்க்கை ஓட்டத்தில் இந்த ஸ்ட்ரெஸ் ஏற்படுகிறது

stress

.உலகில் ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு முதல் காரணமே இந்த ட்ரெஸ்தான்.பொருளாதார பிரச்சினை,குடும்பம் என்று எல்லா வகையிலும் நெருக்கடி இருக்கத்தான் செய்யும் அதற்காக மனதை தேவையில்லாமல் போட்டுக் குழப்பிக்க கூடாது. அம்பானிக்கும் பிரச்சினை இருக்கத்தான் செய்யும்.அதிலிருந்து வெளிவர முயற்சிப்பதே நிம்மதியான வாழ்வுக்கு வழிவகுக்கும். ஸ்ட்ரெஸிலிருந்து விட சில டிப்ஸ்…  

1.நல்ல தூக்கம் அவசியம்:

தூக்கமின்மையும் ஸ்ட்ரெஸ்சிற்கு ஒரு பெரிய காரணம்.காலையில் எழுந்திருப்பது மிகவும் கடினம் தான் இருப்பினும் இதை உங்கள் தினசரி வழக்கமாக கொண்டால் இது உங்களுடலுக்கு மட்டுமன்றி மனதிற்கும் மிகவும் நல்லது.

sleep

காலையில் நேரத்திற்கு எழுந்து இரவில் சீக்கிரம் தூங்க செல்வது உங்கள் மன ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை தரும்.

2.கவனம்:

உங்களை உங்கள் வேலையில் மிகவும் என்கேஜ்டாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.உங்கள் மனதில் வேறு எந்த சிந்தனைகளும் உங்களை ஆட்கொள்ளாது.

man

இப்படியிருக்க நீங்களும் உங்கள் வேலையில் கவனம் செலுத்தவும் அதில் வெற்றியையும் காண எதுவாக இருக்கும். எந்த வேலையாக இருந்தாலும் விருப்பப்பட்டு செய்யுங்கள்.

3.நேரம் பிக்ஸ் செய்யுங்கள்:

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் ஒரு குறிப்பிட்ட நேரங்களை வேலைகளுக்கு நிர்ணயித்திருக்க வேண்டும்.இந்த நேரங்களை தினமும் நீங்கள் பின்பற்றினால் அவை உங்களை வேற எந்த சிந்தனைகளிலிருந்தும் உங்களை தள்ளி வைக்கும்.

fix

உங்கள் நேரத்தையும் நீங்கள் பயனளிக்கும் விதத்தில் செலவு செய்யவும் சந்தோசமாகவும் இருக்க உதவும்.இது உங்களை ரிலாக்ஸாகவும்,லைட்டாகவும் இருக்க உதவும்.

4.தியானம்:

தியானம் என்பது சாமியார்களை நாடி செல்வதும் தியான பீடங்களுக்கு செல்லுவதும் அல்ல! உங்கள் வீடுகளில் தனிமையில் ஒரு அமைதியான அறையையோ அல்லது வெளிப்புறத்தில் உங்கள் மனதிற்கு பிடித்த இடத்தையோ தேர்வு செய்து தியானம் செய்யலாம். சுமார் ஒரு 20 நிமிடங்களை உங்களுக்கென செலவு செய்யுங்கள்

meditation

. நீங்கள் மூச்சு விடுவதை நன்கு ஆராய்ந்து பாருங்கள் நீங்கள் ஒவ்வொரு முறையும் மூச்சுக்காற்றை உள்ளேயும் வெளியேயும் சுவாசிக்கும் பொது உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்களை நன்கு கவனியுங்கள். இது உங்களுக்கு ஒருவிதமான பேரனுபவத்தை தரும்.

5.பிடித்ததை செய்யுங்கள்:

உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள். உதாரணமாக உங்களுக்கு செடி வளர்ப்பது, தோட்டம் வைப்பது அதை பராமரிப்பது, கடற்கரைக்கு செல்வது, இதமான பாடல்களை கேட்பது ஆகியவை உங்களுக்கு பிடிக்குமானால் அவைகளை செய்யுங்கள்.

girl

மேலும் இணையதளத்தில் வரும் நகைச்சுவையான சீரிஸ் போன்றவையும் கண்டு உங்கள் நேரத்தை சந்தோசமாக சிரித்து செலவிடலாம். உங்கள் மனதிற்கு காயம் உண்டாக்கும் எதையும் யோசிக்க வேண்டாம்.

6.டிஸ்ட்ராக்ட்ஷன்சிலிருந்து விலகுங்கள்:

உங்களை திசை திருப்பும் செயல்களிலிருந்து உங்களை விடுவித்துக்கொள்ள முயலுங்கள்.உங்கள் வேலையில் மட்டுமே அதிக கவனத்தையும் செலுத்துங்கள் லேப்டாப்,மொபைல் போன்கள்,தொலைக்காட்சி ஆகியவைகளிலிருந்து உங்களை விளக்கிக்கொள்ளுங்கள். புத்தகம் வாசிக்கும் பழக்கம் இருந்தால் உங்களுக்கு பிடித்த புத்தகங்களை வாங்கிப் படியுங்கள்.

book

ஸ்ட்ரெஸிலிருந்து விடுபட வாசிப்பு பழக்கம் ஆகச்சிறந்த வழி.உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம்  அதை உபயோகமுள்ளதாக செலவு செய்யுங்கள்.இது உங்கள் வேலையில் அதிக உயர்வுகளை கொண்டுவர உதவும்.

ஸ்ட்ரெஸ்ஸை தவிர்ப்பது கடினம் தான் ஆயினும் இவைகளையெல்லாம் செய்துவந்தால் உங்களுக்கு மனஅமைதி கண்டிப்பாக கிடைக்கும்.இது உங்களை பல்வேறு உடல் மற்றும் மனநோய்களிலிருந்து விடுவிக்கும்.