ரொம்ப பேச மாட்டாரு… ஆனா கருத்தா பேசுவாரு.. பாராட்டு மழையில் நனையும் ராஜ்நாத் சிங்…..

 

ரொம்ப பேச மாட்டாரு… ஆனா கருத்தா பேசுவாரு.. பாராட்டு மழையில் நனையும் ராஜ்நாத் சிங்…..

அணு ஆயுதத்தை பயன்படுத்துவது தொடர்பாக கருத்து தெரிவித்ததையடுத்து, அவரு ரொம்ப பேச மாட்டாரு. ஆனா கருத்தா பேசுவாரு என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டிவிட்டர்வாசிகள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் நலக்குறைவால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி  காலமானார். அவரது முதலாம் ஆண்டு நினைவுதினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. 1998ல் வாஜ்பாய் பிரதமராக இருந்த போது இரண்டாது முறையாக ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இந்தியா அணு ஆயுத சோதனை நடத்தியது. அதற்கு முன் 1974ல் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது இதே பகுதியில் அணு ஆயுத சோதனை மேற்கொள்ளப்பட்டு இருந்தது.

பொக்ரானில் வாஜ்பாய் (கோப்பு படம்)

மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று பொக்ரானில் நடைபெற்ற ராணுவ நிகழ்ச்சியின்போது வாஜ்பாய் படத்துக்கு மரியாதை செலுத்தினார். பின்  செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது, இந்தியா அணு ஆயுத பலம் கொண்ட நாடாக இந்தியா மாற வேண்டும் என்பதில் அடல் பிகாரி வாஜ்பாய் உறுதியாக இருந்தார். அதன் களமாக பொக்ரான் அமைந்தது. எதிர்நாடு அணு ஆயுதத்தை பயன்பாடுத்தவரை நாம் அணு ஆயுதத்தை தொடுவதில்லை என்ற கொள்கையில் நாம் இதுவரை உறுதியாக உள்ளோம். ஆனால் எதிர்காலத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப இந்த கொள்கையில் மாற்றம் ஏற்படலாம் என தெரிவித்து இருந்தார். இந்த தகவல் பின்னர் டிவிட்டரிலும் பதிவு செய்யப்பட்டது.

பொக்ரான் அணு ஆயுத சோதனை

ராஜ்நாத் சிங் இந்த பதிவு பலத்த வரவேற்பே பெற்றுள்ளது. அவரு ரொம்ப பேசமாட்டாரு ஆனா பேசினா பாயிண்டா பேசுவாரு என ராஜ்நாத் சிங்கை பாராட்டி டிவிட்டர்வாசிகள் டிவிட் செய்து வருகின்றனர். மேலும், இது சரியான முடிவு எனவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன் எல்லை பகுதியில் பாகிஸ்தான் தனது போர் விமானங்களை கொண்டு நிறுத்தியது. கேட்டதற்கு வழக்கான நடவடிக்கைதான் என்று கூறியது. இந்நிலையில், அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்துவது இல்லை என்ற கொள்கை எதிர்காலத்தில் மாறலாம் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருப்பது பாகிஸ்தானுக்கு கொஞ்சம் கிலியை ஏற்படுத்தியுள்ளது.