ரொமான்ஸ் செய்த ஜோடிகளை வில்லுப்பாட்டு மூலம் கலாய்த்த சாண்டி 

 

ரொமான்ஸ் செய்த ஜோடிகளை வில்லுப்பாட்டு மூலம் கலாய்த்த சாண்டி 

பிக் பாஸ் 3யின் இன்றைக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 70 நாட்களை நெருங்குகிறது. இந்த சீசன் தொடங்கிய நாள் முதல் காதல் என்ற ஒன்று தான் வீட்டை சுற்றிவருகிறது. முதலில் கவின், சாக்ஷி, லாஸ்லியாவின் முக்கோண காதல் கதை ஒளிபரப்பானது. சாக்ஷி வெளியேறிய பின்பு கவின்-லாஸ்லியா காதல். மற்றொரு பக்கம் முகின்- அபிராமி காதல் ஒளிபரப்பானது. 

இதை எல்லாம் ஒரு பக்கம் இருக்க சமீப காலமாக தர்ஷன் மீது ஷெரின் காதலில் விழுந்துள்ளார். ஆனால் அது வெறும் ஒருதலை காதல் மட்டுமே. இந்த நிலையில் இன்றைக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. அதில் சாண்டி வில்லுப்பாட்டு மூலம் தர்ஷன்- ஷெரின் காதலைக் கலாய்ப்பது போல் உள்ளது. 

மொத்தத்தில் இந்த வாரக் கிராமத்து டாஸ்க்கில் பிரச்சனை இன்றி சுமுகமாக எண்டர்டெயினாக செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.