ரேஷன் கார்டில் இயேசு படம்! – ஆந்திராவில் கொந்தளிப்பு

 

ரேஷன் கார்டில் இயேசு படம்! – ஆந்திராவில் கொந்தளிப்பு

ஆந்திராவில் ரேஷன் கார்டில் இயேசு படம் இருப்பதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலானது. இதைப் பார்த்த பலரும் ஜெகன்மோகனுக்கு எதிரான கருத்தைப் பகிர்ந்தனர். கடைசியில், இந்த காரியத்தை செய்தது தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர் என்பது தெரியவந்துள்ளது.

ration

சமூக ஊடகங்களில் ஆந்திர மாநில ரேஷன் கார்டுகளில் இயேசுவின் படம் அச்சிட்டுள்ளார்கள். ஜெகன் மோகன் கிறிஸ்தவர் என்பதால் மதமாற்றம் வேகமாக நடக்கிறது என்று பகிரப்பட்டு வந்தது. இதற்கு பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன.
இந்த நிலையில் மாநில அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “வடலமுரு பகுதியைச் சேர்ந்த ரேஷன் கார்டு டீலர் ஒருவரின் கணவர் தீவிர தெலுங்கு தேசம் ஆதரவாளர். அவர்தான், அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு ரேஷன் கார்டை பிரிண்ட் அவுட் எடுத்து தரும்போது அதில் இயேசுவின் படத்தையும் பிரிண்ட் செய்துள்ளார்.

ration

இவர் இதற்கு முன்பு 2016ம் ஆண்டு சாய்பாபா படத்தையும், 2017, 18ம் ஆண்டுகளில் வெங்கடாச்சலபதி படத்தை பிரிண்ட் செய்து கொடுத்துள்ளார். தற்போது இயேசுவின் படத்தை இவர் பிரிண்ட் செய்து கொடுத்துள்ளார். ஆனால், இவர் மதம் மாறியவரும் இல்லை. இது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளனர்.