ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.200 செலவினத் தொகை – தமிழக அரசு

 

ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.200 செலவினத் தொகை – தமிழக அரசு

துப்புரவு பணியாளர்களும், காவலர்களும், சுகாதாரத்துறையினரும், மருத்துவர்களும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

கொரோனா வைரஸ் இந்தியாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 78,003 ஆக உயர்ந்துள்ள நிலையில், இதுவரை 26,235 பேர் இதிலிருந்து குணமடைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனாவால் 2,549 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 9000ஐ எட்டியுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது. இந்த ஊரடங்கால் மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கிக் கிடக்க துப்புரவு பணியாளர்களும், காவலர்களும், சுகாதாரத்துறையினரும், மருத்துவர்களும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். அவர்களையும் கொரோனா வைரஸ் விட்டு வைக்கவில்லை.  

ttn

ஊரடங்கில் மருத்துவத்துறை மட்டுமின்றி மக்களுக்கு அத்தியாவசியமான துறைகளும் இயங்கி வரும் இந்த நிலையில், ரேஷன் கடை ஊழியர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.200 செலவினத் தொகையாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த இக்கட்டான சூழலில் தொடர்ந்து பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு அரசு பல்வேறு உதவிகளை அறிவித்து வரும் நிலையில், இதன் மூலமாக தமிழகத்தில் உள்ள 34,000 ரேஷன் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், ஊரடங்கு நாட்களான மே மாதம் 3 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை ஒரு ஊழியர் ரூ.3000 பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.