ரேஷன் கடைகளில் ரூ.500க்கு 19 வகையான மளிகைப் பொருட்கள் தொகுப்பு! என்னென்ன பொருட்கள் இருக்கின்றன தெரியுமா?

 

ரேஷன் கடைகளில் ரூ.500க்கு 19 வகையான மளிகைப் பொருட்கள் தொகுப்பு! என்னென்ன பொருட்கள் இருக்கின்றன தெரியுமா?

கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இதன் காரணமாக ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இதன் காரணமாக ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த வாரம் சட்டப்பேரவையில் குடும்ப அட்டைகளுக்கு 1000 ரூபாய் ரொக்கம், அரிசி, சர்க்கரை போன்ற அத்தியாவசிய பொருட்களின் தொகுப்பு இலவசமாக அளிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.  அதன்படி நிவாரணத்தொகையானது 90% வழங்கப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

மளிகை பொருட்கள்

இந்நிலையில் 19 வகையான மளிகைப் பொருட்கள் தொகுப்பை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, மிளகு, கடுகு, சீரகம், வெந்தயம், தோசை புளி, பொட்டுக்கடலை, நீட்டு மிளகாய், தனியா, மஞ்சத்தூள், டீதூள், உப்பு, பூண்டு, கோல்டு வின்னர் சன் பிளவர் ஆயில், பட்டை, சோம்பு, மிளகாய் தூள் ஆகிய 19 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மளிகை கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த பொருட்களின் விற்பனை விரைவில் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.