ரேஷன் அட்டைகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் இன்றுடன் நிறைவு!

 

ரேஷன் அட்டைகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் இன்றுடன் நிறைவு!

அந்த வகையில் அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் ரூ.1,000 மற்றும் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. 

கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்க நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி வரை இருந்த ஊரடங்கு, மே மாதம் 3 ஆம்  தேதி வரை நீடிக்கப்பட்டது. இந்த ஊரடங்கால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அந்த வகையில் அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் ரூ.1,000 மற்றும் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. 

ttn

இந்நிலையில், மக்களுக்கு ரூ.1000 வழங்கப்பட்டு வந்த திட்டம் இன்றோடு நிறைவடைவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இக்காட்டான சூழலில் மக்களுக்கு உதவும் விதமாக அனைத்து ரேஷன் அட்டைகளுக்கு தலா ரூ.1000 அவரவர் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டு வந்ததாகவும் விடுபட்டவர்கள் ரேஷன் கடைகளுக்கு சென்று பெற்றுக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் உள்ள  1.98 கோடி அட்டைத்தாரர்கள் 99% பேர் நிவாரண தொகையை பெற்றுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளது.