ரேஷனில் சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் இனி இலவச அரிசி!

 

ரேஷனில் சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் இனி இலவச அரிசி!

தமிழகத்தில் ஒரே நாடு; ஒரே ரேஷன் என்ற மத்திய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

சென்னை: ரேஷன் கடைகளில், சர்க்கரை அட்டை தாரர்களுக்கு இலவச அரிசி வழங்க உணவு துறை முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ration

தமிழக ரேஷன் கடைகளில் அரிசி அட்டைதாரர்களுக்கு சுமார் , 1.90 கோடி செலவில்  மாதம்தோறும் இலவச அரிசி மற்றும் கோதுமை, குறைந்த விலையில் சர்க்கரை, பருப்பு, பாமாயில் போன்றவை வழங்கப்படுகின்றன.அதேசமயம்  10 லட்சம் சர்க்கரை அட்டை தாரர்களுக்கு இலவச அரிசி கிடையாது என்ற நடைமுறை தான் தமிழகத்தில் உள்ளது.

ration

இந்நிலையில் சர்க்கரை அட்டைகளுக்கும், இலவசமாக அரிசி வழங்க, முடிவு செய்யப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும் போது, ‘ஏற்கனவே தமிழகத்தில் ஒரே நாடு; ஒரே ரேஷன் என்ற மத்திய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஒரே ரேஷன் அட்டை  திட்டத்தின் கீழ், பிற மாநிலத்தவருக்கு, அரிசி அல்லது கோதுமை வழங்கினால், அதற்கு, அவர்களின் மாநிலங்களில், என்ன விலை உள்ளதோ அந்த விலையானது தமிழகத்தில் வசூலிக்கப்படும்.

இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் தமிழக சர்க்கரை அட்டை தாரர்கள் தங்களுக்கும்  அரிசி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைப்பார்கள்.  அதற்கு முன்பே சர்க்கரை அட்டைதாரர்களின்  ஆதரவைப் பெற அவர்களுக்கு இலவசமாக அரிசி வழங்க, முடிவு செய்யப்பட்டு உள்ளது’ என்றார்.