ரேவதி நட்சத்திரத்தின் குணநலன்கள்

 

ரேவதி நட்சத்திரத்தின் குணநலன்கள்

ஜோதிடத்தில் 27 வது நட்சத்திரமாக கருதப்படுவது ரேவதி நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரம் புதனின் அம்சமாக கூறப்படுகிறது.இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிகவும் நேர்மையானவர்களாகவும், கல்வியில் நன்கு தேர்ச்சி பெற்றவராகவும் விளங்குவார்கள்.

ரேவதி நட்சத்திரத்தின் குணநலன்களையும் அதன் முக்கியதுவங்களையும் பற்றி இந்த பதிவில் பார்போம்.

ரேவதி என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளுள் 27 ஆவது பிரிவு ஆகும். இந்தியப் பஞ்சாங்க முறையில் சந்திரன் புவியைச் சுற்றி வரும்போது ரேவதி நட்சத்திரக் கோணப் பிரிவுக்குள் இருக்கும் காலம் ரேவதி நட்சத்திரத்துக்கு உரிய காலம் ஆகும்.

இந்திய சோதிடத்தின்படி, இந்தக் காலப் பகுதியில் பிறக்கும் ஒருவருடைய பிறந்த நட்சத்திரம் அல்லது ஜென்ம நட்சத்திரம் ரேவதி ஆகும்.இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் இருபத்தேழாவது இடத்தைப் பெறுவது ரேவதி நட்சத்திரமாகும். இதன் அதிபதி புதன் பகவானாவார். இது மீன ராசிக்குரியதாகும். இது ஒரு பெண் இனமாக கருதப்படுகிறது. இது உடலில் கால்களை ஆளுமை செய்கிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துக்கள் தே, தோ, , சி ஆகியவையாகும் தொடர் எழுத்துக்கள் சா, சீ ஆகியவையாகும்

ரேவதி 4

கல்வி அறிவும்,அனுபவ அறிவும் நிரம்பப் பெற்றிருப்பார்கள்.எல்லோருக்கும் நன்மையை மட்டுமே நினைப்பவர்களாக இருப்பார்கள். செல்வமும் செல்வாக்கும் பெற்றிருப்பார்கள். எங்கும் எதிலும் நேர்மையைக் கடைப்பிடிப்பதுடன் மற்றவர்களும் நேர்மையாக நடக்கவேண்டும் என்று நினைப்பார்கள். நிதித்துறை, நீதித்துறை, கடல் சார்ந்த தொழில்கள், ஆன்மிகம் சார்ந்த பணிகள் இவர்களுக்கு அமையும்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எல்லோரும் எல்லாம் பெறவேண்டும் என்று நினைப்பார்கள்.சந்தர்ப்ப சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல தங்களை மாற்றிக் கொள்வார்கள்.உள்ளுணர்வால் பெரிய சாதனைகளை நிகழ்த்துவார்கள்.பெற்ற அனுபவ அறிவை,கற்ற தத்துவங்களை சாதாரண மனிதர்களும் புரிந்துகொள்ளும்படி எடுத்துக் கூறுவார்கள்.கவர்ந்திழுக்கும் கண்களை உடையவராகவும் பெண்களை நேசிப்பவராகவும் திறமையாகப் பேசுபவராகவும் வேதம் அறிந்தவர்களை வணங்குபவராகவும் இருப்பார்கள்.

revathy 56

லட்சம் மக்கள் கூடியிருக்கும் கூட்டமென்றாலும் தோழமைப் பேச்சால் அனைவரையும் கவர்வார்கள். இவர்கள் எல்லோராலும் விரும்பப்படுபவர்.மூலதனம் இல்லாமல் மூளை பலத்தால் முன்னேறுவார்கள். சட்ட திட்டங்களுக்கும் நீதி நெறிகளுக்கும் கட்டுப்பட்டவர்.செடி,கொடிகள் வாடினாலே வருத்தப்படும் அளவுக்கு ஜீவகாருண்யம் உடையவர்களாகவும்.

revathy 15

எப்போதும் சிரித்த முகத்துடனும் அழகிய பல் வரிசையுடனும் காட்சி தருபவர்.மூடக் கருத்துகளை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.சபை நாகரிகம் தெரிந்தவர்கள். உங்களில் பலர் ஓவியர்,எழுத்தாளர்,படைப்பாளி ஆகியோராக இருப்பார்கள்.உடன் பிறந்தவர்களுக்காக பூர்வீக சொத்தைக்கூட விட்டுக்கொடுப்பார்கள்.

இவர்கள் மனம் தெளிந்த நீரோடை போல் சுத்தமாக இருக்கும்.தாராள மனமும் அளவுக்கு அதிகமான இளகிய மனமும் இவர்கள் முன்னேற்றத்துக்குத் தடையாக இருக்கும்.இவர்கள் தைரியசாலிதான் ஆனால்,நோயுற்றால் கலவரமடைவார்கள். இவர்களில் பலர் அமைச்சர்,அறங்காவலர் ஆகியோராக இருப்பார்கள்.ரேவதி நட்சத்திரகாரர்களின் விருட்சம் பாலுள்ள இலுப்பை மரம்.இம்மரமுள்ள ஸ்தலங்களை வழிபாடு செய்வது நல்லது.இந்த நட்சத்திரத்தினை நவம்பர் மாதத்தில் இரவு 12 மணிக்கு வானத்தில் காணலாம்.

கூற வேண்டிய மந்திரம்;

      பூஷணம் பரமம் வந்தே ரேவதிசம்

      ச மீருத்யே வராபயோஜ்வயகரம்

     ரத்ன சிம்ஹாசனே ஸ்திதம்.

ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு உரிய பரிகாரங்கள்:

மதுரை மீனாட்சியம்மனை வழிபாடு செய்வதால் சகல நன்மைகளும் இந்த நட்சத்திரக்காரர்களுக்கு  உண்டாகும்.மேலும் உத்திரமேரூரில் வீற்றிருக்கும் முருகப்பெருமானை வணங்குவதால் தனம்பிக்கை மேலோங்கும்.