ரேப்பிட் டெஸ்ட் கிட் எத்தனை, எவ்வளவு விலைக்கு வாங்கப்பட்டது? – மு.க.ஸ்டாலின் கேள்வி

ரேப்பிட் டெஸ்ட் கிட் எத்தனை, எவ்வளவு விலைக்கு வாங்கப்பட்டது? – மு.க.ஸ்டாலின் கேள்வி

தமிழக அரசு லட்சக் கணக்கில் ரேப்பிட் டெஸ்ட் கிட் ஆர்டர் செய்ததாக கூறிய நிலையில் நேற்று 24 ஆயிரம் கிட் வந்ததாக கூறப்பட்டது. இன்று தமிழகத்துக்கு மத்திய அரசு கொஞ்சம் கருவிகளை வழங்கியதாக கூறப்படுகிறது. உண்மையில் தமிழக அரசு ஆர்டர் செய்ததா இல்லையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

corona-test-kit.jpg

இத பற்றி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். அதில், “கொரோனா நோய்த் தொற்றுப் பரிசோதனைக் கருவி தனது மாநிலத்துக்கு எத்தனை வாங்கப்பட்டது, என்ன விலைக்கு வாங்கப்பட்டது, எவ்வளவு குறைவான விலைக்கு வாங்கப்பட்டது என்பதை சத்தீஸ்கர் மாநில அமைச்சர் வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

அதேபோல் தமிழக அரசும் எவ்வளவு கருவிகள், என்ன விலைக்கு வாங்கப்பட்டுள்ளது என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். நாடே உயிர் காக்கப் போராடிவரும் இந்த நேரத்தில், அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காகவே இதனை வலியுறுத்துகிறேன்!” என்று கூறியுள்ளார்.