ரேப்பிட் டெஸ்ட் கருவிகள் வரவில்லை! – 3வது நிலைக்கு சென்ற பிறகுதான் பரிசோதனையா? – மருத்துவர்கள் அதிர்ச்சி

ரேப்பிட் டெஸ்ட் கருவிகள் வரவில்லை! – 3வது நிலைக்கு சென்ற பிறகுதான் பரிசோதனையா? – மருத்துவர்கள் அதிர்ச்சி

தமிழக அரசு ஆர்டர் செய்திருந்த ரேப்பிட் கொரோனோ பரிசோதனை கிட் நேற்று இரவு தமிழகம் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்று அல்லது நாளைதான் வரும் என்று கூறப்பட்டுள்ளதால் மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

உலகம் முழுக்க கொரோனா தொற்று பரவி வருகிறது. லட்சக் கணக்கில் மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் லட்சத்தை இப்போதுதான் நெருங்கியுள்ளோம். தமிழகத்தில் சில ஆயிரம் பேருக்குத்தான் இதுவரை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதற்குள்ளாகவே அது மூன்றாம் நிலையை எட்ட வாய்ப்புள்ளதாக முதல்வர் எச்சுக்கைவிடுத்துள்ளார். மூன்றாம் நிலைக்கு செல்வதைத் தடுக்க அதிக அளவில் பரிசோதனை செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள், மருத்துவர்கள் கூறி வந்தனர்.

coivd-test-kit

இந்த நிலையில் கொரோனா இருப்பதைக் கண்டறியும் பரிசோதனை கிட்-க்கு ஆர்டர் கொடுத்திருப்பதாக கடந்த வாரம் முதலே தமிழக அரசு கூறி வந்தது. இன்னும் ஒரு சில நாட்களில் வந்துவிடும் என்று போக்கு காட்டி வந்தனர். நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதல் கட்டமாக 50 ஆயிரம் கிட் இரவே வந்துவிடும். நாளை முதல் பரிசோதனை தொடங்கும் என்று கூறியிருந்தார். ஆனால், அவர் கூறியது போல கொரோனா டெஸ்ட் கிட் இன்னும் தமிழகத்துக்கு வந்து சேரவில்லை. 

corona-testing

இன்று அல்லது நாளைதான் இந்த கருவிகள் வரும் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு தமிழகம் முழுவதும் அது அனுப்பப்படும். அதன் பிறகே பரிசோதனைகள் தொடங்கப்படும். இதற்கு எப்படியும் 12ம் தேதியாகிவிடும் என்று சுகாதாரத் துறை வட்டாரங்கள் கூறுகின்றன. ஊரடங்கு என்று மார்ச் 24ம் தேதி அறிவித்துவிட்டு, கொரோனா போய்விடும் என்று அரசு அலட்சியமாக இருந்துவிட்டது. தற்போது ஊரடங்கை நீட்டிப்பது பற்றிய பேச்சுக்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. தற்போது அறிவிக்கப்பட்ட ஊரடங்கு முடிவதற்கு முன்பாக வாவது பரிசோதனைகள் தொடங்குமா என்ற கவலை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.