“ரேப்பிங் நியூ இயர்” ஆன “ஹேப்பி நியூ இயர்” – செல்பி எடுத்த சிறுமியை  சீரழித்தனர் -குதறி எடுத்த குரூப்  

“ரேப்பிங் நியூ இயர்” ஆன “ஹேப்பி நியூ இயர்” – செல்பி எடுத்த சிறுமியை  சீரழித்தனர் -குதறி எடுத்த குரூப்  

புத்தாண்டு தினத்தன்று தனது நண்பருடன் ஆரவல்லி மலைத்தொடருக்குச் சென்ற 16 வயது சிறுமி, மானேசர் நகரில் உள்ள கசன் கிராமம் அருகே இரண்டு நபர்களால் கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை தெரிவித்தார். புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக, அந்தப் பெண்ணும் அவரது நண்பரும் கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு மலைக்கு சென்றபோது இந்த சம்பவம் நடந்தது.

சிறுமி  செல்பி எடுத்துக்கொண்டிருந்தபோது குற்றம் சாட்டப்பட்ட – ஷ்ரவன் குமார் (34), நிதேஷ் மிஸ்ரா (30) ஆகியோர் அங்கு வந்து சிறுமியுடன் தவறாக நடந்து கொள்ளத் தொடங்கியபோது உடன் வந்த சிறுவன் அதை  எதிர்த்தபோது அவர்கள் அவரை அடித்து இழுத்து சென்றதாக, போலீஸ் அதிகாரி கூறினார்.

குமார் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தபோது மிஸ்ரா டீனேஜ் சிறுவனை இழுத்துச் சென்றார். பின்னர், குமார் சிறுமியையும் பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பெண்ணை  பாலியல் வன்கொடுமை செய்ததை  வீடியோ எடுத்து , கிளிப்புகளை சமூக ஊடகங்களில் பதிவேற்ற அச்சுறுத்தியதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டினர். இருப்பினும், போலீசார் அவர்கள்  மொபைல் போன்களில் இதுபோன்ற எந்த வீடியோவையும் கண்டுபிடிக்கவில்லை.

“Delete செய்த விடியோவை மீட்டெடுக்க தடயவியல் பரிசோதனைக்கு அவர்களின் மொபைல் போன்கள் அனுப்பப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்” என்று காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.