ரேபிஸ் நோய் தடுப்பூசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தடை!

 

ரேபிஸ் நோய் தடுப்பூசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தடை!

உலகம் முழுவதிலும் மக்கள் பெரிதும் பயப்படும் நோய்கள் வரிசையில் ரேபிஸ் நோயும் உண்டு. ரேபிஸ் வைரஸ் கிருமிகள் வெறிநாயின் எச்சிலிலிருந்து வெளியேறும்

புதுதில்லி: ரேபிஸ் நோய்க்கான தடுப்பூசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தஹ்டை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகம் முழுவதிலும் மக்கள் பெரிதும் பயப்படும் நோய்கள் வரிசையில் ரேபிஸ் நோயும் உண்டு. ரேபிஸ் வைரஸ் கிருமிகள் வெறிநாயின் எச்சிலிலிருந்து வெளியேறும். வெறிநாய்கள் மனிதரைக் கடிக்கும்போது, கிருமிகள் உடலுக்குள் புகுந்து, மூளைத் திசுக்களை அழித்து ரேபீஸ் நோயை உண்டாக்கும்.

dog

ரேபிஸ் நோயால் உலகம் முழுவதும் ஆண்டுக்கு 65 ஆயிரம் பேர் வரை உயிரிழக்கின்றனர் என கூறும் ஆய்வு இதில் பாதி உயிரிழப்புகள் இந்தியாவில் ஏற்படுவதாகவும் கூறுகிறது. ரேபிஸ் நோய் தாக்கப்பட்டுள்ள நாய்களை கொன்று விடலாம். ஆனால், எது ரேபிஸ் நோய் தாக்கப்பட்ட நாய் எது சாதாரண நாய் என்பதை கண்டறிவதில் சிக்கல் உள்ளது. சாதாரண தெரு நாய்களை கொன்றால் விலங்குகள் நல வாரியம் எதிர்ப்பு தெரிவிக்கும். சாதாரண தெரு நாய்களை கூட பிடித்து முறைப்படி கருத்தடைசெய்ய வேண்டும் என்று சட்டம் சொல்கிறது.

ரேபிஸ் நோய்க்கான தடுப்பூசி மருந்து குதிரையின் ரத்தத்திலிருந்து தயாரிக்கப்படுவதால் செலவு அதிகம். இதனால் அரசு இதில் சுணக்கம் காட்டுவதாக தெரிகிறது. அதிகரித்துவரும் வெறிநாய்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு தடுப்பூசி மருந்தின் உற்பத்தி அதிகரிக்கவில்லை.

vaccine

இந்நிலையில், ரேபிஸ் நோய்க்கு போடப்படும் தடுப்பூசிக்கு நாடு முழுவதும் கடும் பற்றாக்குறை நிலவுவதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதால், மருந்து உற்பத்தி நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு ரேபிஸ் நோய்க்கான தடுப்பூசியை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து ஆய்வு செய்ய சுகாதாரத்துறை அமைச்சகம், சட்ட அமைச்சகத்திடம் கோரியுள்ளது. இது இறுதியாகும் பட்சத்தில், இந்த வார இறுதியில் இந்த தடை நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் வாசிங்க

மோடியின் செல்லமான ஆர்டர்; பாஜக வேட்பாளாரானார் அஜித் அண்ணன்?!