ரேபிட் டெஸ்ட் கருவிகளை அதிக விலைக்கு வாங்கியதா தமிழக அரசு?!

 

ரேபிட் டெஸ்ட் கருவிகளை அதிக விலைக்கு வாங்கியதா தமிழக அரசு?!

தமிழக அரசும் 50,000 ரேபிட் கிட் கருவிகளை 600 ரூபாய்க்கு ஷான் பையோடெக் என்ற நிறுவனத்திடம் வாங்கியதாக தெரிகிறது. 

இந்தியாவில் கொரோனா அதிகமாக பரவியதால், கொரோனா வைரஸை 30 நிமிடங்களில் கண்டறியும் 5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் சீனாவிடம் ஆர்டர் செய்யப்பட்டது. இதனையடுத்து கடந்த 16 ஆம் தேதி 6,50,000 கருவிகள் இந்தியாவுக்கு வந்தது.  ரியல் மெடபாலிக்ஸ் மற்றும் ஆர்க் பார்மாசியுடிகல்ஸ் என்னும் நிறுவனம் சீனாவிடம் இருந்து ரூ.245க்கு வாங்கி ரூ.600க்கு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. தமிழக அரசும் 50,000 ரேபிட் கிட் கருவிகளை 600 ரூபாய்க்கு ஷான் பையோடெக் என்ற நிறுவனத்திடம் வாங்கியதாக தெரிகிறது. 

ttn

இந்நிலையில், ரியல் மெடபாலிக்ஸ் நிறுவனம் விதியை மீறி விற்றதாக ஷான் பையோடெக் நிறுவனம் மீது டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளது. அதில், சீனாவிடம் இருந்து வாங்கி மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு விற்பனை செய்யும் அனுமதியை தாங்கள் பெற்றுள்ளதாகவும் ஷான் பையோடெக் நிறுவனம் விதியை மீறி தமிழக அரசுக்கு அதிக விலைக்கு விற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

இந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் விசாரித்தனர். அப்போது, 60% அதிக விலைக்கு விற்றதை எண்ணி வருத்தம் தெரிவித்த நீதிபதிகள், வரிகளுடன் சேர்த்து ரூ.400க்கு தான் விற்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். கொரோனாவால் பொருளாதாரம் சரிந்துள்ளதால், சோதனை கருவிகளின் விலையை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.