ரெஸ்பெக்ட்டட் ஜெயிலர் சார், கைண்ட்லி கிராண்ட் மீ பெய்ல் ஃபார் 1 மந்த் – கைதியின் லீவ் லட்டர்!

 

ரெஸ்பெக்ட்டட் ஜெயிலர் சார், கைண்ட்லி கிராண்ட் மீ பெய்ல் ஃபார் 1 மந்த் – கைதியின் லீவ் லட்டர்!

சிறைக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டதால், தன்னுடைய வயல் காய்ந்துபோய் கிடப்பதாகவும், உடனடியாக பயிர் செய்யவேண்டும், எனவே 42 நாட்கள் பரோலில் என்னை விடுதலை செய்யவேண்டும் என கடிதத்தில் கோரியிருக்கிறார்.

நித்தியானந்தான்னு நம்மூர்ல சிரிப்பு சாமியார் இருக்குற (இருந்த) மாதிரி, ஹரியானாவில் மிகப் பிரபலமான சாமியார் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் (ராபர்ட் மட்டும் மிஸ்ஸிங்) சிங் என்பவர். படங்களில் சூப்பர்மேன் ஹீரோவாக எல்லாம் நடித்திருக்கிறார். கிட்டத்தட்ட கடவுளாகவே கொண்டாடப்பட்ட குர்மீத், கடந்த 2017ஆம் ஆண்டு, பல ஆண்டுகளுக்கு முந்தைய இரு பெண்களை பாலியல் வன்முறை செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். ஆளும் நடவடிக்கையும் சிரிப்பு சாமியார் மாதிரி இருந்தாலும், செய்த காரியம் எல்லாம் வயலன்ட் டைப். குர்மீத்துக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட செய்தி அறிந்த அவரது ஆதரவாளர்கள் செய்த அட்டூழியம் இரண்டு மூன்று நாட்களுக்கு நீடித்தது.

Gurmeet Singh

ரோஹ்தக், சுனாரியா சிறைச்சாலையில் காலத்தை கடத்திவரும் குர்மீத், திடீரென ஜெயில் வார்டனுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதாவது, தான் சிறைக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டதால், தன்னுடைய வயல் காய்ந்துபோய் கிடப்பதாகவும், உடனடியாக பயிர் செய்யவேண்டும், எனவே 42 நாட்கள் பரோலில் என்னை விடுதலை செய்யவேண்டும் என கடிதத்தில் கோரியிருக்கிறார். ஜெயிலரும் அந்த கடிதத்தை மாவட்ட நிர்வாகத்துக்கு ஃபார்வேர்ட் பண்ண, பரோல் கொடுக்கலாமா வேண்டாமா என மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது!