ரெஸ்ட்ரூமா போறீங்க… அதுக்கும் வேட்டு வைக்கும் கார்ப்பரேட்  நிறுவனங்கள்!

 

ரெஸ்ட்ரூமா போறீங்க… அதுக்கும் வேட்டு வைக்கும் கார்ப்பரேட்  நிறுவனங்கள்!

அலுவலகங்களில் சிலர் ரெஸ்ட்ரூிமல் நீண்ட நேரம் ஓய்வெடுப்பதை தவிர்க்க அங்கு மாறுதல்களை செய்ய சில கார்ப்பரேட் நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. இதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

toilet

ஓய்வறைகளில் வெஸ்டர்ன் டாய்லெட்களை மாற்றியமைத்து, நீண்ட நேரம் உட்காராத வகையில் புதிய டாய்லெட்டை வடிவமைத்துள்ளார். இதை பல கார்ப்பரேட் நிறுவனங்களும் தங்கள் அலுவலகங்களில் பொருத்த ஆரம்பித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. டேவ் விஸ்கோ என்பவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், இந்த புதிய கழிப்பறை பற்றிய அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்

offce

. அதில்,  “தற்போது உள்ள வெஸ்டர்ன் கழிப்பறைகளில் அமரும் இடத்தை வழக்கத்தை விட 13 டிகிரி சாய்வாக அமைத்துள்ளார்கள். ஒருவர் இந்த வெஸ்டர்ன் டாய்லெட்டில் 5 நிமிடங்களுக்கு மேல் அமர்ந்தால் அவருக்கு அசௌகரியத்தை கொடுக்கும். இது ஊழியர்களின் செயல்பாட்டை அதிகரிக்க உதவும்” என்று கூறியுள்ளார்.

rest

வெளிநாடுகளில் பல நிறுவனங்கள் தங்கள் அலுவலக கழிவறைகளில் இந்த புதிய வெஸ்டர்ன் டாய்லெட்டை அமைக்க ஆரம்பித்துள்ளன. இதற்கு ஊழியர்கள் மத்தியில் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இந்த பதிவுக்கும் கூட பலரும் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.