ரெய்டுலாம் இல்லாத அமைதியான வாழ்க்கை கேட்பேன் – மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்!!

 

ரெய்டுலாம் இல்லாத அமைதியான வாழ்க்கை கேட்பேன் – மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்!!

பிகில் திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் மாஸ்டர்  படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். த்ரில்லர் பாணியில்  உருவாகும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். மேலும் நடிகர் சாந்தனு, நடிகை மாளவிகா மோகனன், ஆண்டனி வர்கீஸ். விஜே ரம்யா,கௌரி கிஷன்  உள்ளிட்ட பலர்  நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லி, கர்நாடகா, சென்னை, நெய்வேலியில் நடைபெற்றது.  மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போதுபேலஸ் ஹோட்டலில் நடைபெற்றுவருகிறது. 

Image

விழாவில் பேசிய நடிகர் விஜய், “லோகேஷ் கனகராஜ் மாநகரத்தை திரும்பி பார்க்க வச்சாரு. கைதியை திரும்ப திரும்ப பார்க்க வச்சாரு… விஜய் சேதுபதி பெயர்ல மட்டும் எனக்கு இனம் குடுக்கல மனசுலையும் இடம் குடுத்துருக்காரு. ரசிகர்கள் இல்லாமல் இசையீட்டு விழா நடத்துவதற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டிருக்கிறேன். என் நண்பர் அஜித்குமார் மாதிரி டிரஸ் பண்ணிட்டு வரலாம்னு நினைச்சேன். ஆனா நமக்கு இது செட் ஆகாது. உண்மையா இருக்கனும்னா சில நேரத்துல ஊமையா இருக்கனும், கொரோனா அச்சுறுத்தலாலும் ரசிகர்கள் வருகையை தவிர்த்தோம். வாழ்க்கை நதி மாதிரி. நம்மள வணங்குவாங்க,

வரவேற்பாங்க, கல்லு எரிவாங்க. ஆனா நம்ம கடமையை செஞ்சுட்டு போயிட்டே இருக்கனும்” என பேசினார். அப்போது குறுக்கிட்ட தொகுப்பாளர்கள் இப்ப இருக்குற தளபதிகிட்ட 20 வருடத்துக்கு முன்னாடி இருந்த இளைய தளபதி கிட்ட ஏதாவது கேக்கனும்னா என்ன கேப்பீங்க என கேள்வி எழுப்பினர்….. அப்ப வாழ்ந்த வாழ்க்கையை கேப்பேன்.. அமைதியா இருந்துச்சு, ரெய்டுலாம் இல்லாம…