ரெனால்ட் டஸ்டர் பி.எஸ்.6 கார் இந்தியாவில் அறிமுகம் – விலை, சிறப்பம்சங்கள் உள்ளே!

 

ரெனால்ட் டஸ்டர் பி.எஸ்.6 கார் இந்தியாவில் அறிமுகம் – விலை, சிறப்பம்சங்கள் உள்ளே!

இந்தியாவில் ரெனால்ட் டஸ்டர் பி.எஸ்.6 கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டெல்லி: இந்தியாவில் ரெனால்ட் டஸ்டர் பி.எஸ்.6 கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் பி.எஸ்.6 எஞ்சின்கள் கொண்ட இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மட்டுமே வருகிற ஏப்ரல்.1-ஆம் தேதி முதல் விற்கப்படும். அதனால் அனைத்து நிறுவனங்களும் தங்களது வாகனங்களின் பி.எஸ்.6 மாடலை தயாரித்து வெளியிட்டு வருகின்றன. இந்த நிலையில், இந்தியாவில் ரெனால்ட் டஸ்டர் பி.எஸ்.6 கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ttn

இதன் டஸ்டர் ஆர்.எக்ஸ்.இ தொடக்க மாடல் விலை ரூ.8.49 லட்சம் எனவும், ஆர்.எக்ஸ்.எஸ். வேரியண்ட் ரூ.9.29 லட்சம் எனவும், டாப் எண்ட் ஆர்.எக்ஸ்.இசட். வேரியண்ட் ரூ.9.99 லட்சம் எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் முக்கிய சிறப்பம்சங்களாக 1.5 லிட்டர் H4K நான்கு சிலிண்டர்கள் பெட்ரோல் என்ஜின், 106 பி.எஸ் பவர், 142 என்.எம் டார்க் செயல்திறன், 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், 17 இன்ச் அலாய் வீல்கள், என்ஜின் ஸ்டார்ட் / ஸ்டாப் அம்சம், ரிமோட் கேபின் பிரீ-கூலிங் வசதி ஆகியவை இடம்பெற்றுள்ளது. மற்றபடி புதிய ரெனால்ட் காரில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.