ரெனால்ட் க்விட் காரின் பி.எஸ்.6 மாடல் இந்தியாவில் அறிமுகம் – விலை, அம்சங்கள் விபரம் உள்ளே

 

ரெனால்ட் க்விட் காரின் பி.எஸ்.6 மாடல் இந்தியாவில் அறிமுகம் – விலை, அம்சங்கள் விபரம் உள்ளே

ரெனால்ட் க்விட் காரின் பி.எஸ்.6 மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டெல்லி: ரெனால்ட் க்விட் காரின் பி.எஸ்.6 மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் பி.எஸ் 6 இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அறிமுகம் ஆகிக் கொண்ட இருக்கின்றன. வருகிற ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இந்தியாவில் பி.எஸ்.6 என்ஜின் கொண்ட வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும். இந்த நிலையில், ரெனால்ட் க்விட் காரின் பி.எஸ்.6 மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கார் ஒரு ஹேட்ச்பேக் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் தொடக்க விலை ரூ. 2.92 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டாப் எண்ட் மாடல் விலை ரூ. 4.92 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

kwid

மேலும் எஸ்.டி.டி., ஆர்.எக்ஸ்.இ., ஆர்.எக்ஸ்.எல்., ஆர்.எக்ஸ்.டி. மற்றும் கிளைம்பர் ஆகிய வேரியண்ட்களில் புதிய ரெனால்ட் க்விட் கார் கிடைக்கிறது.  பி.எஸ்.4 மாடல்களின் விலையுடன் ஒப்பிடும்போது ரெனால்ட் க்விட் ரூ. 9000 வரை விலை அதிகமாகும். பி.எஸ்.6 என்ஜின் தவிர இந்தக் காரில் புதியதாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த புதிய மாடலில் 800சிசி என்ஜின் மற்றும் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இரு என்ஜின்களும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றுள்ளன.