ரெட் ஒயின் vs ஒயிட் ஒயின்: ரெண்டுல எது உங்க உடம்புக்கு நல்லதுன்னு தெரியுமா?

 

ரெட் ஒயின் vs  ஒயிட் ஒயின்: ரெண்டுல எது உங்க உடம்புக்கு நல்லதுன்னு  தெரியுமா?

பல பேர் தற்போது ஒயின் குடிக்கும் நடைமுறைக்கு வந்துவிட்டார்கள்.

பல பேர் தற்போது ஒயின் குடிக்கும் நடைமுறைக்கு வந்துவிட்டார்கள். சமீபகாலமாக சில திருமண விழாக்களில் கூட ஒயின்கள் குளிர்பானம் போன்று எளிதாக கண்களுக்குப் புலப்பட்டு விடுகிறது. இது ஒருபுறமிருந்தாலும் ஒயின்களில் ரெட் ஒயின் , ஒயிட் ஒயின் என்று இரண்டு வகை  உள்ளது பலபேருக்குத் தெரியும். இதில் எது உடல்நலத்திற்குச் சிறந்தது என்பது சிலருக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. அதனால் இந்த தொகுப்பில் ஒயின்களின் நன்மைகள் குறித்துத் தான் நாம் பார்க்கப் போகிறோம். 

red white

ரெட் ஒயின், கருப்பு மற்றும் சிவப்பு திராட்சைகளைக் கொண்டும், ஒயிட்  ஒயின் வெள்ளை திராட்சைகளிலும்  செய்யப்படுகிறது. ஆனால்  இரண்டிற்குமான செய்முறை வேறுவேறு  தான். ரெட் ஒயினுக்கு  சிவப்பு திராட்சைகளை  இரண்டு வாரம் ஓக் பேரலில் பதப்படுத்த வேண்டும்.  ஒயிட் ஒயின் தயாரிக்க வெள்ளை திராட்சையின் தோல் மற்றும் விதைகளை நீக்கி ஈஸ்டுடன் கலந்து எஃகு பாத்திரத்தில் பதப்படுத்தப்பட வேண்டும். திராட்சைகளைப் பதப்படுத்துவதால் அதன் சுவை மட்டுமே மாறுகிறது.ஆனால்  அதில் கிடைக்கும் சத்துக்கள் நமக்கு அப்படியே தான் கிடைக்கிறது. அதனால் இரண்டு ஒயின்களிலும் நன்மைகள் உள்ளன. 

wine

ஒயிட் ஒயின்  இதயத்திற்கு நல்லது. இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன், இதய நோய்களைத் தடுக்கிறது. ரெட் ஒயினில்  பாலிபினால்கள் இருப்பதாக அறியப்பட்டுள்ளது.  அதனால் ஒரு நாளுக்கு மிகக் குறைந்த அளவு ரெட் ஒயின் குடித்து வந்தால் நீங்கள் சீக்கிரம் வயதாவதை இது தடுக்கிறது. அதேபோல் ரெட் ஒயினில் அதிக ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால் ரத்தக்கட்டைத் தடுக்கும்.  மேலும் ரெட் ஒயின்  ரத்த அழுத்தத்தையும் தடுக்கிறது. 

redwine

இதனால் ஒயிட் ஒயினை விட ரெட் ஒயினே உடலுக்கு ஆரோக்கியமானதாகப்  பார்க்கப்படுகிறது. இருப்பினும் அளவோடு சாப்பிட்டால் அமிர்தமும் நஞ்சு என்பது போல இரண்டிலும் மது இருப்பதால் அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழுங்கள்.