ரெட் அலெர்ட்; 4 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை விரைவு

 

ரெட் அலெர்ட்; 4 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை விரைவு

தமிழகத்தில் அக்டோபர் 7-ம் தேதி 25 செ.மீ.க்கும் மேல் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் ரெட் அலெர்ட் விடுத்துள்ளது.

சென்னை: தமிழகத்திற்கு அக்டோபர் 7-ம் தேதி மிக அதிக கனமழை பெய்வதற்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் கோவை, நீலகிரி, மதுரை, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை விரைந்துள்ளது.

தமிழகத்தில் அக்டோபர் 7-ம் தேதி 25 செ.மீ.க்கும் மேல் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் ரெட் அலெர்ட் விடுத்துள்ளது. இதனையடுத்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணிகளுக்கு தயார் நிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளதால்  கோவை, நீலகிரி, மதுரை, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர். கோவை, நீலகிரி, மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு தலா 1 ஒரு குழுவும், கன்னியாகுமரி கடலோர மாவட்டம் என்பதால் அங்கௌ 2 குழுக்களும் சென்றுள்ளனர்.