ரெட் அலெர்ட் என்றால் என்ன? எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்?

 

ரெட் அலெர்ட் என்றால் என்ன? எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்?

தமிழகத்துக்கு அதி தீவிர கனமழை எச்சரிக்கையான ரெட் அலெர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது

சென்னை: தமிழகத்துக்கு அதி தீவிர கனமழை எச்சரிக்கையான ரெட் அலெர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

வடகிழக்கு பருமலை தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழகம் முழுவதும் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் அக்டோபர் 7-ம் தேதி 25 செ.மீ.க்கும் மேல் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரெட் அலெர்ட் எனும் இந்த சொல் கேரளா மழை வெள்ளத்தின் போது அதிகமாக உபயோகப்படுதப்பட்டது. கேரளாவை புரட்டி போட்ட மழையின் போது அங்கு இந்த எச்சரிக்கி விடப்பட்டது. தற்போது தமிழகத்துக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.

வானிலை மையங்கள் அதிகமாக பயன்படுத்தும் வார்த்தையான ரெட் அலெர்ட் என்றால் என்ன? அது தவிர விடுக்கப்படும் இதர எச்சரிக்கைகள் என்ன? அது மாதிரியான எச்சரிக்கைகள் விடுக்கப்படும் போது நாம் என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பார்க்கலாம்..

வானிலை தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவது போல் அறியும்பட்சத்தில் வானிலை ஆய்வு மையம் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும். அவை, ரெட் அலெர்ட், எல்லோ அலெர்ட், ஆம்பர் அலெர்ட், பச்சை அலெர்ட் என நான்கு வகையாக பிரிக்கப்படுகிறது.

ரெட் அலெர்ட்: வானிலை மிக மிக மோசமாக இருக்கும் பட்சத்தில் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. குறைந்த நேரத்தில் அதிக கனமழை பெய்யும். அதி தீவிர கனமழை எச்சரிக்கையான ரெட் அலெர்ட்டின் போது, சில நிமிடங்களிலேயே 10 செ.மீட்டருக்கு மேல் மழை பெய்யும். அவ்வாறு பெய்யும் போது, மிகுந்த பொருட் சேதமும் உயிர் சேதமும் ஏற்பட வாய்ப்புள்ளது. மின்சார சேவை நிறுத்தம், சாலை போக்குவரத்து துண்டிப்பு முதலிய மக்களின் இயல்பு வாழக்கையினை பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் வானிலை இருக்கும். உள்ளுர் நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி அபாயகரமான பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்பவையாகும்.

மஞ்சள் அலெர்ட்: மிக மோசமான வானிலை இருக்கும் பட்சத்தில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. மஞ்சள் எச்சரிக்கை கொடுத்தால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

ஆம்பர் அலெர்ட்: உயிர்சேதம் மற்றும் பொருட்சேதம் ஏற்படும் வகையில் வானிலை இருக்கும் பட்சத்தில் ஆம்பர் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. பயணம் செய்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். தாழ்வான பகுதிகளில் அதிக சேதங்கள் ஏற்படும் என்பதால் மக்கள் வேறு இடத்திற்கு செல்ல தயாராக இருக்க வேண்டும்.

பச்சை அலெர்ட்: மழை பொழிவதற்கான அறிகுறி தென்பட்டால் பச்சை எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. எனவே,  மக்கள் அச்சப்படத்தேவையில்லை.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

**மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

**பொதுமக்கள் தங்கள் உயிரையும், உடமைகளையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

**வேறு இடங்களுக்கு செல்ல தயாராக இருக்க வேண்டும்.

**அபாயகரமான பகுதிகளுக்கு செல்ல கூடாது

**செல்போன் உள்ளிட்டவைகளுக்கு சார்ஜ் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

**அத்தியாவசிய பொருட்கள், பிரெட் உள்ளிட்ட உணவு வகைகளை சேமித்து வைத்து கொள்ள வேண்டும்.