ரெட்மி நோட் 6 ப்ரோ விரைவில் இந்தியாவில் அறிமுகம்

 

ரெட்மி நோட் 6 ப்ரோ விரைவில் இந்தியாவில் அறிமுகம்

ரெட்மி நோட் 6 ப்ரோ விரைவில் சியோமி நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன

டெல்லி: ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போனை விரைவில் சியோமி நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 5 மற்றும் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் பிப்ரவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த மாதம் தாய்லாந்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போனை அடுத்த மாதம் இந்தியாவில் சியோமி நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரெட்மி 5 சீரிஸ் போன்கள் வெளியான ஆறு மாதங்களிலேயே ரெட்மி 6 மற்றும் ரெட்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போன்களை சியோமி நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது.

இந்தியாவில் ரெட்மி நோட் 5 சீரிஸ் போன்றே புதிய நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் விலை ரூ.14,999 முதல் நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மார்ட்போன் பிளாக், புளு மற்றும் ரோஸ் கோல்டு, சிவப்பு நிறங்களில் கிடைக்கும்.

ரெட்மி நோட் 6 ப்ரோ சிறப்பம்சங்கள்:

 **6.26 இன்ச் 1080×2280 பிக்சல் ஃபுல் ஹெச்.டி.,பிளஸ் வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

**1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 14nm பிராசஸர்

**4 ஜி.பி. ரேம்

**64 ஜி.பி. இன்டெர்னல் மெமரி

**மெமரியை நீட்டிக்கும் வசதி

**ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த MIUI

**12 எம்.பி. பிரைமரி கேமரா  f/1.9, 1/2.55″, 1.4µm, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா f/2.0, 1.12µm

** 20 எம்.பி f/2.0 செல்ஃபி கேமிரா, 2 எம்.பி. இரண்டாவது கேமிரா

**கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்

**டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், எஃப்.எம்., ரேடியோ, மைக்ரோ யுஎஸ்பி  2.0

**4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி