ரெடிமேட் இட்லி மாவு பிரியரா நீங்கள் ! பந்தி போட்டு அழைக்கும் நோய்கள்!

 

ரெடிமேட் இட்லி மாவு பிரியரா நீங்கள் ! பந்தி போட்டு அழைக்கும் நோய்கள்!

கடைகளில் வாங்கி பயன்படுத்தும் ரெடிமேட் இட்லி மாவு உடல்நலத்திற்கு உகந்தது இல்லை என ஒரு சிலர் கருத்துக்கள் தெரிவிக்கின்றனர். அதற்குக் காரணம் உடனடி இட்லி மாவு சீக்கிரம் கெட்டுப் போய்விடகூடாது என்பதற்காக கால்சியம் சிலிகேட் சேர்க்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் செரிமான மண்டலம் பாதிக்கப்படுவதோடு, அஜீரணக் கோளாறுகள், வயிற்றுப் போக்கு, வயிற்று வலி உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கடைகளில் வாங்கி பயன்படுத்தும் ரெடிமேட் இட்லி மாவு உடல்நலத்திற்கு உகந்தது இல்லை என ஒரு சிலர் கருத்துக்கள் தெரிவிக்கின்றனர்.
அதற்குக் காரணம் உடனடி இட்லி மாவு சீக்கிரம் கெட்டுப் போய்விடகூடாது என்பதற்காக கால்சியம் சிலிகேட் சேர்க்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் செரிமான மண்டலம் பாதிக்கப்படுவதோடு, அஜீரணக் கோளாறுகள், வயிற்றுப் போக்கு, வயிற்று வலி உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

dosa-batter-01

கடைகளில் வாங்குகிற மாவினால் மட்டும் இந்த பிரச்சனை இல்லை பாக்கெட்டுகளில் அடைக்கப்படுகின்றன இன்ஸ்டன்ட் மாவிலும் பிரச்சனைகள் ஏராளமாக உள்ளது. ஈகோலி எனும் பாக்டீரியா மாவை வேக வைத்தாலும் முழுமையாக அழிவதில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இந்த அவசர யுகத்தில் பணம் கொடுத்து உடல்நலத்தை பாதிக்கும் பொருட்களை வாங்கி சாப்பிடுகிறோம். ஈகோலி பாக்டீரியா தாக்கத்தினால் நாள்பட்ட வயிற்று வலி, உடல் வறட்சி, வாந்தி, மயக்கம், இரைப்பை நோய், தலை சுற்றல் உள்ளிட்ட அபாயங்கள் ஏற்படுத்தும்.
ஆட்டுக்கல்லில் மாவு ஆட்டும் முன்னரும் மாவு ஆட்டிய பின்னரும் சுத்தமாக கழுவும் பழக்கம் நம் முன்னோர்களுக்கு இருந்து வந்தது. ஆனால் கடைகளில் மாவு அரைக்கும் கிரைண்டர்கள் எந்த அளவுக்கு சுத்தமாக கழுவுகிறார்கள் என நமக்குத் தெரியாது. அந்தக் காலத்தில் இருந்த ஆட்டுக்க தற்போது காட்சிப் பொருளாக மாறிவிட்டது. எனவே இனியாவது ரெடிமேடாக கிடைக்கும் மாவு வாங்காமல் வீட்டில் ஆட்டுக்கல்லை பயன்படுத்தி மாவு அரைத்து இட்லி, தோசை சாப்பிட்டு சந்தோஷமாக இருங்கள்.