ரூ.8 கோடி மதிப்புள்ள 40 ஆயிரம் கொரோனா பரிசோதனை கருவிகளை தமிழக அரசுக்கு வழங்கிய டாடா நிறுவனம்

 

ரூ.8 கோடி மதிப்புள்ள 40 ஆயிரம் கொரோனா பரிசோதனை கருவிகளை தமிழக அரசுக்கு வழங்கிய டாடா நிறுவனம்

தமிழக அரசுக்கு சுமார் 40 ஆயிரம் கொரோனா பரிசோதனை கருவிகளை டாடா நிறுவனம் வழங்கியுள்ளது.

சென்னை: தமிழக அரசுக்கு சுமார் 40 ஆயிரம் கொரோனா பரிசோதனை கருவிகளை டாடா நிறுவனம் வழங்கியுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதுவரை கொரோனவால் 1200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் நேற்று ஒரேநாளில் 31 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதில் 1000க்கும் மேற்பட்டோர் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் ஆவார்கள். தமிழகத்திலேயே சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

palanisamy

பெரு நிறுவனங்கள் முதல் குறு வியாபாரிகள் வரை தங்களால் இயன்ற உதவியை கொரோனா பாதிப்பில் இருந்து மீள தமிழகத்திற்கு செய்து வருகிறார்கள். பல ஆயிரம் பேர் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்து வருகின்றனர். அந்த வகையில் ஏப்ரல் 13 வரை மொத்தம் 134 கோடியே 63 லட்சத்து 54 ஆயிரத்து 364 ரூபாய் நிதி முதல்வரின் பொது நிவாரண நிதியில் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 7 முதல் 13 வரையிலான காலகட்டத்தில் ரூ.10 லட்சத்திற்கு மேல் நிதி அளித்தவர்கள் பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

அதில் பல தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களும், அரசு நிறுவன ஊழியர்களும், நடிகர்களும் நிதியுதவி அளித்துள்ளனர். இந்தநிலையில், தமிழக அரசுக்கு சுமார் 40 ஆயிரத்து 32 எண்ணிக்கையில் PCR என்றழைக்கப்படும் கொரோனா பரிசோதனை கருவிகளை டாடா நிறுவனம் வழங்கியுள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.8 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.