ரூ.71,500,00,00,000!!! வங்கிகளில் நடந்த மோசடி ஓராண்டில்!

 

ரூ.71,500,00,00,000!!! வங்கிகளில் நடந்த மோசடி ஓராண்டில்!

காங்கிரஸ் ஆட்சியின்போது, ஒவ்வொரு வருடமும் தோராயமாக, 4000 வழக்குகளில் அதிகபட்சமாக 10,170 கோடி ரூபாயாக இருந்த வங்கி மோசடி, பாஜக ஆட்சியின்போது ஒவ்வொரு வருடமும் முந்தைய வருடத்தைவிட‌ இரண்டு-மூன்று மடங்கு கூடுதல் தொகைக்கு ஊழல் நடந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் கடைசி ஆறு ஆண்டுகளில் 30,937 கோடியாக இருந்த மோசடி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஐந்து மடங்காக பெருகி ஒன்றரை லட்சம் கோடியாக, அதாவது 1,56,074,00,000,00 உயர்ந்துள்ளது.

பத்தாயிரம் கோடி ஊழல், இருபதாயிரம் கோடி மோசடி என்று எழுத்தால் எழுதுவதைவிட, 71,500,00,00,000 கோடி ரூபாய் வங்கி மோசடி கடந்த ஓராண்டில் மட்டும் இந்தியாவில் நடந்துள்ளது என்று எழுதினால் கிளாமராக இருக்கிறதல்லவா? இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 2018-19 நிதியாண்டில் மட்டும் மொத்தம் 6,880 வழக்குகளில் கண்டுபிடிக்கப்பட்ட வங்கி மோசடிகள்மூலம் அதிகளவு நட்டம் ஏற்பட்டுள்ளது. முந்தைய நிதியாண்டில் 5,916 வழக்குகளில் 41,167 கோடி ரூபாய் மோசடி நடந்திருந்தது.

Bank Fraud

கடந்த 11 நிதியாண்டுகளில் மட்டும் கணக்கில் கொண்டால், 53,334 வழக்குகளில் 2,05,000,00,00,000 கோடி ரூபாய் (இரண்டு லட்சத்து ஐயாயிரம் கோடி) மோசடி நடந்துள்ளது.

2008-2009 நிதியாண்டில் 4,372 வழக்குகளில் 1860 கோடி, 2009-2010 நிதியாண்டில் 4,669 வழக்குகளில் 1,998 கோடி, 2010-2011 நிதியாண்டில் 4,534 வழக்குகளில் 3,815 கோடி, 2011-2012 நிதியாண்டில் 4,093 வழக்குகளில் 4,501 கோடி, 2012-2013 நிதியாண்டில் 4,234 வழக்குகளில் 8,590 கோடி, 2013-2014 நிதியாண்டில் 4,306 வழக்குகளில் 10,170 கோடி,  ரூபாய்க்கு மோசடி நடந்துள்ளது. அதாவது முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் கடைசி ஆறு ஆண்டுகளில் பதிவான மொத்த வங்கி மோசடி தொகை 30,937.61 கோடி ரூபாய்.

Manmohan Singh

அதன்பிறகு, 2014ஆம் ஆண்டு மோடி தலைமையில் பாஜகவின் முதல் அரசு அமைந்தபோது, 2014-15 நிதியாண்டில் 4,639 வழக்குகளில் 19,455 கோடி, 2015-2016 நிதியாண்டில் 4,639 வழக்குகளில் 18,698 கோடி, 2016-2017 நிதியாண்டில் 5,076 வழக்குகளில் 23,933 கோடி, 2017-2018 நிதியாண்டில் 5,916 வழக்குகளில் 41,167 கோடி, 2018-2019 நிதியாண்டில் 71,500 கோடி ரூபாய்க்கும் மோசடி நடந்துள்ளது.

Narendra Modi

காங்கிரஸ் ஆட்சியின்போது, ஒவ்வொரு வருடமும் தோராயமாக, 4000 வழக்குகளில் அதிகபட்சமாக 10,170 கோடி ரூபாயாக இருந்த வங்கி மோசடி, பாஜக ஆட்சியின்போது ஒவ்வொரு வருடமும் முந்தைய வருடத்தைவிட‌ இரண்டு-மூன்று மடங்கு கூடுதல் தொகைக்கு ஊழல் நடந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் கடைசி ஆறு ஆண்டுகளில் 30,937 கோடியாக இருந்த மோசடி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஐந்து மடங்காக பெருகி ஒன்றரை லட்சம் கோடியாக, அதாவது 1,56,074,00,000,00 உயர்ந்துள்ளது. இந்த  புள்ளி விவரங்கள் அனைத்தும் நம்முடையது இல்ல மக்களே! இவை அனைத்தும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவல்கள். ஏதேனும் விக்கினம் இருந்தால், ரிசர்வ் வங்கி அக்கட சூடு.