ரூ.7 கோடிக்கு கார் வாங்கிய அசத்திய பிரபல நடிகர் 

 

ரூ.7 கோடிக்கு கார் வாங்கிய அசத்திய பிரபல நடிகர் 

அஜய்தேவ்கன் ரூ.7 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராயஸ் கல்லினன் காரை வாங்கியுள்ளார். 

சென்னை: அஜய்தேவ்கன் ரூ.7 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராயஸ் கல்லினன் காரை வாங்கியுள்ளார். 

இயக்குநர், தயாரிப்பாளர், ஹீரோ என்று இந்தியில் பன்முக திறமை கொண்டவராக வலம் வருபவர் அஜய்தேவ்கன். இவர், பாலிவுட் ஹீரோயின் கஜோலின் கணவர் ஆவர்.தற்போது இவர் ராஜமவுலி இயக்கி வரும் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்து வருகிறார். 

rolls

இந்த நிலையில் இவருக்கு கார் என்றால் ரொம்ப பிடிக்கும். அதனால் ஏராளமான ஆடம்பர கார்களை வாங்கி குவித்து வைத்துள்ளார். அந்த வரிசையில் தற்போது ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் விலை உயர்ந்த காரை வாங்கியுள்ளார். 

ajay

அந்த காரின் விலை ரூ.6.95 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. இந்தியாவில்  இந்த காரை தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் டி-சீரிஸ் அதிபர் பூஷன் குமார் ஆகிய இருவர் மட்டும் தான் பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.