ரூ.6,699 விலை கொண்ட எல்ஜி கேன்டி பட்ஜெட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

 

ரூ.6,699 விலை கொண்ட எல்ஜி கேன்டி பட்ஜெட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

டெல்லி: எல்ஜி கேன்டி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எல்ஜி நிறுவனத்தின் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அது எல்ஜி கேன்டி ஸ்மார்ட்போன் ஆகும். மாற்றக்கூடிய பேக் கவர் கான்செப்ட் கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போன் இன்று முதல் (செப்டம்பர்.1) விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் இரண்டு கேமராக்களிலும் புகைப்படங்களை ஜிஃப் போன்று மாற்றும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

எல்ஜி கேன்டி சிறப்பம்சங்கள்:

– 5.0 இன்ச் ஹெச்.டி. ஆன்-செல் டச் டிஸ்ப்ளே

– 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் பிராசஸர்

– 2 ஜிபி ரேம்

– 16 ஜிபி இன்டெர்னல் மெமரி

மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

– 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்

– 5 எம்பி செல்ஃபி கேமரா

எல்.டி.இ., வைஃபை. ப்ளூடூத், யுஎஸ்பி 2.0 டைப்-சி

– 2500 எம்.ஏ.ஹெச். பேட்டரி

எல்ஜி கேன்டி ஸ்மார்ட்போன் சில்வர், புளு மற்றும் கோல்டு ஆகிய நிறங்களில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.6,699 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.