ரூ.6,638 கோடி லாபம் பார்த்த எச்.டி.எப்.சி. வங்கி…. எப்படி தனியார் வங்கி மட்டும் லாபம் பார்க்கிறாங்க?

 

ரூ.6,638 கோடி லாபம் பார்த்த எச்.டி.எப்.சி. வங்கி…. எப்படி தனியார் வங்கி மட்டும் லாபம் பார்க்கிறாங்க?

எச்.டி.எப்.சி. வங்கி கடந்த செப்டம்பர் காலாண்டில் நிக லாபமாக ரூ.6,638 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற நிதியாண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் சுமார் 25 சதவீதம் அதிகமாகும்.

ரூ.6,638 கோடி லாபம் பார்த்த எச்.டி.எப்.சி. வங்கி…. எப்படி தனியார் வங்கி மட்டும் லாபம் பார்க்கிறாங்க?

நம் நாட்டில் பொதுத்துறை வங்கிகள் வாராக் கடன் சுமையால் தள்ளாடி வருகின்றன. பொதுத்துறை வங்கிகளில் ஒரு சில வங்கிகள் மட்டுமே லாபத்தை கண்ணில் காட்டுகின்றன. பெரும்பாலான அரசு வங்கிகள் லாபம் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. நஷ்டத்தை ஏற்படுத்தாமல் இருந்தால் சரி என்று சொல்லும் அளவுக்கு உள்ளன. ஆனால் தனியார் வங்கிகள் பெரும்பாலும் லாப பாதையில்தான் பயணிக்கின்றன. அதற்கு காரணம் திறமையான நிர்வாகமா,? கடன் வழங்கும் நடைமுறையா? என்றால் இரண்டும்தான்.

நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான எச்.டி.எப்.சி. வங்கி கடந்த ஜூலை-செப்டம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகரலாபமாக ரூ.6,638 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற நிதியாண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் சுமார் 25 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் எச்.டி.எப்.சி.வங்கியின் நிகர லாபம் ரூ.5,322 கோடியாக இருந்தது.

எச்.டி.எப்.சி. கார்டு

கடந்த செப்டம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் எச்.டி.எப்.சி. வங்கியின் மொத்த வருவாய் 36,130.96 கோடியாக உயர்ந்துள்ளது. 2018 செப்டம்பர் காலாண்டில் அந்த வங்கியின் மொத்த வருவாய் ரூ.30,124.49 கோடியாக இருந்தது. 2019 செப்டம்பர் இறுதி நிலவரப்படி, எச்.டி.எப்.சி. வங்கியின் மொத்த வாராக் கடன் 1.38 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது 2018 செப்டம்பர் இறுதியில் 1.33 சதவீதமாக இருந்தது.