ரூ.6000 விலையில் ஃபேஸ் அன்லாக் வசதி… மொபிஸ்டார் சி1 ஷைன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

 

ரூ.6000 விலையில் ஃபேஸ் அன்லாக் வசதி… மொபிஸ்டார் சி1 ஷைன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

மொபிஸ்டார் நிறுவனம் சி1 ஷைன் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

டெல்லி: மொபிஸ்டார் நிறுவனம் சி1 ஷைன் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில் மொபிஸ்டார் நிறுவனம் சி1 ஷைன் என்ற புது ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறைந்த விலையில் ஃபேஸ் அன்லாக் வசதி கொண்ட ஸ்மார்ட்போன்கள் வரிசையில் இது புதிதாக சேர்ந்துள்ளது. மேலும் இதில் குவாட்கோர் மீடியாடெக் MT6739 பிராசஸர், 2 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் ஆகிய வசதிகள் இடம்பெற்றுள்ளது.

மொபிஸ்டார் சி1 ஷைன் சிறப்பம்சங்கள்:

– 5.34 இன்ச் 480×960 பிக்சல் FWVGA+ 18:9 டிஸ்ப்ளே

– 1.28 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் MT6739 64-பிட் பிராசஸர்

பவர் வி.ஆர். ரோக் GE8100 GPU

– 2 ஜி.பி. ரேம்

– 16 ஜி.பி. மெமரி

மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ

ஹைப்ரிட் டூயல் சிம்

– 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்

– 8 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்

– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

– 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

மொபிஸ்டார் சி1 ஷைன் ஸ்மார்ட்போன் புளு, கோல்டு மற்றும் ஸ்பேஸ் கிரே ஆகிய மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ரூ.6,100 விலையில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போன் டிசம்பர் 15 முதல் நாடு முழுக்க சுமார் 500-க்கும் அதிகமான விற்பனையாளர்களிடம் கிடைக்கும்.