ரூ.597 விலையில் தினமும் பிரம்மாண்டமான 10ஜிபி 4ஜி டேட்டா – வோடபோன் அசத்தல்!

 

ரூ.597 விலையில் தினமும் பிரம்மாண்டமான 10ஜிபி 4ஜி டேட்டா – வோடபோன் அசத்தல்!

சென்னை: வோடபோன் நிறுவனம் தினமும் 10ஜிபி டேட்டா வழங்கும் பிரீபெய்டு ரீசார்ஜ் பிளானை அறிமுகம் செய்துள்ளது.

இந்திய டெலிகாம் சந்தையில் ஜியோவும், ஏர்டெல்லும் மாறி மாறி போட்டியாக ரீசார்ஜ் பிளானை அறிமுகம் செய்து கொண்டிருக்க, சத்தமே இல்லாமல் வோடபோன் ஒரு பிரம்மாண்டமான ரீசார்ஜ் பிளானை குறைந்த விலையில் அறிமுகம் செய்திருக்கிறது.

அதன்படி ரூ.597 விலையில் 168 நாட்கள் வேலிடிட்டி உடன் நாள் ஒன்றுக்கு 10 ஜிபி 4ஜி டேட்டா, 100 எஸ்.எம்.எஸ், வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் அளிக்கப்படுகிறது. இதேபோன்று ரூ.597க்கு ஏர்டெல்லும் பிரீபெய்ட் பிளான் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ஆனால் அந்த பிளான் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது.

சமீபத்தில் தான் ஐடியா நிறுவனமும், வோடபோன் நிறுவனமும் ஒன்றிணைந்து வோடபோன் ஐடியா லிமிடெட் என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.