ரூ.50 லட்சம் கொரோனா நிவாரண தொகை – பஞ்சாப் அசோசியேஷன் டீம் தமிழக முதல்வரிடம் வழங்கியது

 

ரூ.50 லட்சம் கொரோனா நிவாரண தொகை – பஞ்சாப் அசோசியேஷன் டீம் தமிழக முதல்வரிடம் வழங்கியது

பஞ்சாப் அசோசியேஷன் டீம் தமிழக முதல்வரிடம் ரூ.50 லட்சத்திற்கான காசோலையை கொரோனா நிவாரண தொகையாக வழங்கியது.

சென்னை: பஞ்சாப் அசோசியேஷன் டீம் தமிழக முதல்வரிடம் ரூ.50 லட்சத்திற்கான காசோலையை கொரோனா நிவாரண தொகையாக வழங்கியது.

கொரானாவால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 649ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 13 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து 42 பேர் குணமடைந்தனர். தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதனால் தற்போது தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 26-ஆக அதிகரித்துள்ளது.

TTN

தமிழ்நாட்டில் 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்று சந்தேகம் காரணமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதுதவிர 9 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தப்படும் வார்டில் அனுமதிக்கப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பஞ்சாப் அசோசியேஷன் டீம் சார்பாக விக்ரம் அகர்வால் மற்றும் ரமேஷ் லம்பா ஆகியோர் தமிழக முதல்வரிடம் ரூ.50 லட்சத்திற்கான காசோலையை கொரோனா நிவாரண தொகையாக நேரில் வழங்கினர்.