“ரூ. 5 க்கு கறி கோழி…ஆனாலும் வாங்க ஆள் இல்லை”…வேதனையில் வியாபாரிகள்!

 

“ரூ. 5 க்கு கறி கோழி…ஆனாலும் வாங்க ஆள் இல்லை”…வேதனையில் வியாபாரிகள்!

நிறுவனத்திற்கு விற்று வருகிறார். அதேபோல் கோழி இறைச்சி கடை ஒன்றையும் நடத்தி வருகிறார். 

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேல் ராஜ்.  இவர் கடந்த 8 ஆண்டுகளாக பல்லடத்தில் இருந்து கோழி குஞ்சுகளை பெற்று அதை வளர்த்து பின் அதன் எடைக்கு ஏற்ப அதே நிறுவனத்திற்கு விற்று வருகிறார். அதேபோல் கோழி இறைச்சி கடை ஒன்றையும் நடத்தி வருகிறார். 

ttn

இந்நிலையில் கொரோனா அச்சம் காரணமாகப் பொதுமக்கள்  கோழி இறைச்சியை வாங்க முன்வருவதில்லை. இதனால் கறி கோழிகளின் விலை கிலோ  20 ரூபாய் என்ற நிலையை எட்டி உள்ளது. இதனால் வடிவேல் ராஜ் 2000 கோழிகளுக்கு தீவனம் கூட போட முடியாத நிலையில் உள்ளார்.

ttn

அவரிடம் கறி  கோழி வாங்கிய நிறுவனமும் கைவிரித்துவிட  உயிருடன் உள்ள கோழியை கிலோ 5 ரூபாய்க்கும் இறைச்சியை  20க்கும் விற்க முடிவு செய்து  விற்பனை செய்து  வருகிறார். இவர் மட்டுமின்றி  தமிழகம் முழுவதும் இதே  நிலை தான் தொடர்வதாகத் தொடர்வதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.