ரூ. 5 கோடி நிதியில் மதுவிலக்கு விழிப்புணர்வு : அமைச்சர் தங்கமணி பேச்சு !

 

ரூ. 5 கோடி நிதியில் மதுவிலக்கு விழிப்புணர்வு : அமைச்சர் தங்கமணி பேச்சு !

அமைச்சர் தங்கமணி, பூரண மதுவிலக்கை அமல் படுத்துவது தான் அதிமுக அரசின் கொள்கை என்றும் விரைவில் படிப்படியாக மது கடைகள் மூடப்படும் என்றும் பதிலளித்தார்.

மதுவிலக்கு அமல்படுத்துவதாக அதிமுக அரசு நெடுங்காலமாக கூறி வருகிறது. ஆனால், இதுவரை எந்த மதுக்கடைகளும் மூடப்படவில்லை. இது குறித்து  காங்கிரஸ் எம்எல்ஏ கே.ஆர். ராமசாமி கூட்டத்தொடரில் கேள்வி எழுப்பினார். அதற்கு அமைச்சர் தங்கமணி, பூரண மதுவிலக்கை அமல் படுத்துவது தான் அதிமுக அரசின் கொள்கை என்றும் விரைவில் படிப்படியாக மது கடைகள் மூடப்படும் என்றும் பதிலளித்தார். அதனைத் தொடர்ந்து, மதுவிலக்கை அமல்படுத்தும் முயற்சியாக மதுபானங்களின் விலை 15% உயர்த்தப் பட்டிருப்பதாகவும், மது விற்பனை குறித்த தகவல் வரும் போது அதிகமாக விற்பனையாவது போலத் தோன்றுகிறது என்று தெரிவித்தார். 

ttn

அமைச்சர் வேலுமணி பேசிக்கொண்டிருக்கும் போதே, அமைச்சர் சிவி சண்முகம் புதுவையில் சூதாட்ட கிளப் தொடங்குவதற்காகக் காங்கிரஸ் நடவடிக்கை எடுத்து வருகிறது. காங்கிரஸின் மதுவிலக்கு கொள்கை மாநிலத்திற்கு மாநிலம் மாறுமா என்று விமர்சித்தார். கிறிஸ்துமஸ் மற்றும் நியூ இயர் கொண்டாட்டத்தின் போது மட்டும் சுமார் ரூ.450 கோடி அளவிற்கு மதுவிற்பனை ஆனதாகத் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.