ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக ஆய்வாளர் ராஜராஜன் கைது… லஞ்சம் வாங்கும் வைரல் வீடியோ!

 

ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக ஆய்வாளர் ராஜராஜன் கைது… லஞ்சம் வாங்கும் வைரல் வீடியோ!

இதில் முதற்கட்டமாக 15 ஆயிரம் ரூபாயை தங்கவேல் கொடுத்துள்ளார். மீதமுள்ள 5 ஆயிரம் தரச்சொல்லி வற்புறுத்தியுள்ளார். 

ராமநாதபுரம்: லஞ்ச பணத்துடன் கையும்  களவுமாக பிடிபட்ட பார்த்திபனூர் காவல் ஆய்வாளர் ராஜராஜனை   லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

TTN

இராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜராஜன். இந்நிலையில் பார்த்திபனூர் அருகே மேலகுடியிருப்பு பகுதியில் குடும்பத்தில் பிரச்னை காரணமாக 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  இதிலிருந்து 3 பெண்களை விடுவிக்கக்கோரி தங்கவேல் என்பவரிடம்  ஆய்வாளர் ராஜராஜன் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சப்பணம் கேட்டுள்ளார்.  இதில் முதற்கட்டமாக 15 ஆயிரம் ரூபாயை தங்கவேல் கொடுத்துள்ளார். மீதமுள்ள 5 ஆயிரம் தரச்சொல்லி வற்புறுத்தியுள்ளார். 

இதனால் இன்ஸ்பெக்டர் ராஜராஜன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் தங்கவேல் புகார் தெரிவித்து உள்ளார். அவர்களின் ஆலோசனையின்படி ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரம் நோட்டுகளை இன்ஸ்பெக்டர் ராஜராஜனிடம் நேற்று தங்கவேல் கொடுத்துள்ளார். அதை ராஜராஜன் வாங்கிய போது  அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும்  களவுமாக பிடித்துள்ளனர்.