ரூ.475 கோடி மது பொங்கலுக்கு விற்பனை

 

ரூ.475 கோடி மது பொங்கலுக்கு விற்பனை

பொங்கலை முன்னிட்டு, ‘டாஸ்மாக்’ கடைகளில், 475 கோடி ரூபாய் மதிப்பிலான, மது வகைகள் விற்பனையாகி உள்ளன

சென்னை: பொங்கலை முன்னிட்டு, ‘டாஸ்மாக்’ கடைகளில், 475 கோடி ரூபாய் மதிப்பிலான, மது வகைகள் விற்பனையாகி உள்ளன.

தமிழக அரசின், டாஸ்மாக் நிறுவனத்துக்கு, 4,800 மது கடைகள் உள்ளன. இவற்றில், சராசரியாக தினமும், 80 கோடி ரூபாய் மதிப்பிலான, பீர் மற்றும் மது வகைகள் விற்பனையாகின்றன.
இது, வார விடுமுறை, தீபாவளி, ஆங்கில புத்தாண்டு உள்ளிட்ட விசேஷ தினங்களில், 100 கோடி ரூபாயை தாண்டுகிறது.

பொங்கலை முன்னிட்டு, சனிக்கிழமை முதல் நாளை(ஜன.,18) வரை, அரசு விடுமுறை. அதில், நேற்று(17ம் தேதி) மட்டும், டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை. தொடர் விடுமுறையால், மது விற்பனை அதிகம் இருக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. 
அதன்படி, 12ல் இருந்து, 15ம் தேதி வரை, 475 கோடி ரூபாய் மதிப்பிலான, மது வகைகள் விற்பனையாகி உள்ளன.

டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தொடர் விடுமுறையால், மது கடைகளில், 12ம் தேதி, 105 கோடி ரூபாய்; 13ல், 120 கோடி ரூபாய்; 14ல், 110 கோடி ரூபாய்; 15ம் தேதி, 140 கோடி ரூபாய்க்கு, மது விற்பனையாகி உள்ளதாக, மாவட்ட மேலாளர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.